என்.டி.ஏ.வால் இது­வரை ஒத்­தி­வைக்­கப்­பட்ட தேர்­வு­கள் எத்­தனை? அதற்கான காரணங்கள் என்ன?

viduthalai
3 Min Read

மக்­க­ள­வை­யில் நாடா­ளு­மன்ற தி.மு.க. குழுத் தலை­வர் கனி­மொழி கருணாநிதி கேள்வி!

புதுடில்லி, ஜூலை 28- என்.டி.ஏ.வால் இது­வரை ஒத்­தி­வைக்­கப்­பட்ட தேர்­வு­கள் எத்­தனை? தேர்­வர்­க­ளுக்­கான உள்­கட்­ட­மைப்பு வச­தி­கள் என்ன? என்று மக்களவையில் தி.மு.க. நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வர் கனி­மொழி கரு­ணா­நிதி, மக்களவை தி.மு.க. உறுப்பினர் இராணி சிறீகு­மார் ஆகி­யோர் எழுப்­பிய கேள்­விக்கு ஒன்­றிய கல்வி அமைச்­சர் பதில் அளித்­துள்­ளார்.

இது பற்­றிய விவ­ரம் வரு­மாறு:–

தேசிய தேர்வு முகமை தொடங்­கப்­பட்­ட­தி­லி­ருந்து (என்.டி.ஏ.) கடந்த ஏழு ஆண்­டு­க­ளில் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்டு பின் ஒத்தி வைக்­கப்­பட்ட தேர்­வு­கள் எத்­தனை? ஆண்டு வாரி­யாக விவ­ரங்­கள் தேவை என்­றும், தேர்­வு­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்­ட­தற்­கான கார­ணங்­கள் மற்­றும் அது ஒத்­தி­வைக்­கப்­ப­டு­வ­தைத் தடுக்க என்.டி.ஏ. எடுத்த நட­வ­டிக்­கை­கள் மற்­றும் தொலை­தூர இடங்­க­ளில் ஒதுக்­கப்­ப­டும் மய்யங்­கள் மற்­றும் வெவ்­வேறு மய்யங்­க­ளில் மாற்­றுத் திற­னா­ளி­கள் பயன்­ப­டுத்­து­வ­தற்கு போது­மான உள்­கட்­ட­மைப்­பு­கள் இல்­லா­தது குறித்து மாண­வர்­கள் எழுப்­பும் புகார்­கள் குறித்து என்.டி.ஏ. அறிந்­தி­ரு க்­கி­றதா- என்­றும்,

அப்­ப­டி­யா­னால், அதன் விவ­ரங்­கள் என்ன? மேலும் தேர்­வர்­க­ளின் புகார்­களை, குறை­களை நிவர்த்தி செய்­யும் வழி­மு­றை­கள் என்­னென்ன?” என்­றும் தி.மு.க. நாடா­ளு­மன்ற குழு தலை­வர் கனி­மொழி கரு­ணா­நிதி மற்­றும் நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் டாக்­டர் இராணி சிறீகு­மார் ஆகி­யோர் எழுத்­துப்­பூர்­வ­மாக நாடா­ளு­மன்­றத்­தில் கேள்­வி­கள் எழுப்­பி­னர்.

இக்­கேள்­வி­க­ளுக்கு ஒன்­றிய கல்­வித் துறை இணை­ய­மைச்­சர் டாக்­டர். சுகந்த மஜூம்­தார் எழுத்­து­பூர்­வ­மாக அளித்த பதில் வரு­மாறு:–
“தேசிய தேர்வு முகமை கடந்த 2018–இல் தொடங்­கப்­பட்­ட­தி­லி­ருந்து 5.4 கோடிக்­கும் அதி­க­மான மாண­வர்­களை உள்­ள­டக்­கிய 240 தேர்­வு­களை வெற்­றி­க­ர­மாக நடத்­தி­யி­ருக்­கின்­றது.

என்.டி.ஏ. ஆல் நடத்­தப்­ப­டும் பெரும்­பா­லான தேர்­வு­கள் பல்­வேறு பாடங்­க­ளில், பல்­வேறு கால முறை­க­ளில், பல கால இடை­வெ­ளி­க­ளில் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.

இப்­ப­டிப்­பட்ட நிலை­யில் எதிர்­பா­ராத, இதற்கு முன் நடந்­தி­ராத கோவிட் தொற்று போன்ற சூழ்­நி­லை­கள், தொழில் நுட்­பக் கோளா­று­கள், தள­வாட பற்­றாக்­குறை, நிர்­வாக சிக்­கல்­கள், அரசு ஆணை­கள் போன்ற நிலை­க­ளில் ஒத்தி வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

அதன்­படி… 2020, 2021 ஆண்­டு­க­ளில் கோவிட் தொற்று -ஊர­டங்கு கார­ண­மாக JEE, NEET, CSIR-UGC NET, ICAR AIEEA, DUET, AIAPGET, JIPMAT ஆகிய தேர்­வு­கள் ஒத்தி வைக்­கப்­பட்­டன. 2021 CMAT தேர்வு AICTE தேர்வு திட்­டத்தை மாற்­றி­ய­மைத்­த­தால் ஒத்தி வைக்­கப்­பட்­டது.
மேலும் 2022 இல் இந்­திரா காந்தி திறந்த நிலை பல்­க­லைக்­க­ழக பி.ஹெச்.டி. நுழை­வுத் தேர்வு நிர்­வா­கக் கார­ணங்­க­ளால் ஒத்தி வைக்­கப்­பட்­டது. 2023 GAT-B, BET ஆகிய தேர்­வு­கள் மண்­டல தேர்வு மய்யங்­க­ளு­ட­னான ஆலோ­ச­னைக்­குப் பின் ஒத்தி வைக்­கப்­பட்­டது.

NCET 2024 தேர்வு தொழில் நுட்­பக் கார­ணங்­க­ளால் ஒத்தி வைக்­கப்­பட்­டது.

CSIR NET 2024 தேர்வு தள­வாட பிரச்­சி­னை­கள் கார­ண­மாக ஒத்தி வைக்­கப்­பட்­டது.

தற்­போது பெரும்­பா­லான தேர்­வு­க­ளுக்­கான தேர்வு நாட்­காட்­டியை முன்­ன­தா­கவே என்.டி.ஏ. அறி­விக்­கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. இது தேர்­வர்­க­ளின் வச­திக்­காக செய்­யப்­ப­டு­கி­றது. என்­டி­ஏ­வின் கட்­டுப்­பாட்­டிற்கு அப்­பாற்­பட்ட கார­ணி­கள், மறு­அட்­ட­வ­ணை­கள் / ஒத்­தி­வைப்­பு­க­ளுக்கு இட­ம­ளிக்­கும் இடைக்­கால நாட்­க­ளைக் கருத்­தில் கொண்டு தேர்வு நாட்­காட்டி திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

என்.டி.ஏ. நடத்­தும் தேர்­வு­களை எழு­து­ப­வர்­க­ளுக்கு தேவை­யான உட்­கட்­ட­மைப்பு வச­தி­கள் செய்து தரப்­ப­டு­கின்­றன.

விண்­ணப்­ப­தா­ரர்­க­ளின் முன்­னு­ரி­மையை கருத்­தில் கொண்­டும், ஒவ்­வொரு தேர்வு மய்யத்­தில் உள்ள இடங்­க­ளின் அளவை கருத்­தில் கொண்­டும் தேர்வு மய்யங்­கள் கணினி மென்­பொ­ருள் மூல­மாக ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­கின்­றன.

பெரும்­பா­லும் தேர்வு எழு­து­ப­வர்­கள் தேர்ந்­தெ­டுத்த நக­ரத்­துக்­குள் ஒரு தேர்வு மய்யம் அவர்­க­ளுக்கு ஒதுக்­கீடு செய்ய முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

சில சம­யங்­க­ளில் தேர்வு எழு­து­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மாக இருக்­கும் பட்­சத்­தில், அவர்­க­ளால் தேர்வு செய்­யப்­பட்ட நக­ரத்­துக்­குள் தேர்வு மய்யம் அளிக்­கப்­பட முடி­யா­மல் போக­லாம்.

இது­போன்ற சந்­தர்ப்­பங்­க­ளில், NTA அவர்­களை அரு­கி­லுள்ள இடங்­க­ளில் தங்க வைக்க முயற்­சிக்­கி­றது.
மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு மய்யங்­களை ஒதுக்­கும் போது, உள்­கட்­ட­மைப்­பு­கள் அவர்­கள் பயன்­ப­டுத்­தும் வகை­யில் இருப்­பதை உறுதி செய்ய உரிய கவ­னம் செலுத்­தப்­ப­டு­கி­றது. விண்­ணப்­ப­தா­ரர்­க­ளின் புகார்­கள்/குறை­கள் மின்­னஞ்­சல்­கள் மற்­றும் ஹெல்ப் டெஸ்க் தொலை­பேசி எண்­கள் மூலம் பெறப்­ப­டு­கின்­றன. அவை முறை­யாகத் தீர்த்து வைக்­கப்­ப­டுக்­கின்­றன என்று குறிப்­பிட்­டுள்­ளார் ஒன்­றிய கல்­வித் துறை இணை அமைச்­சர் டாக்­டர். சுகந்த மஜூம்­தார்.

ஒன்­றிய அர­சின் பதி­லு­ரை­யில் என்.டி.ஏவால் தற்­போது நிறுத்­தி­வைக்­கப்­பட்ட பெரும்­பா­லான தேர்­வு­கள் இடம்­பெ­றா­மல் இருப்­பது அரசு தேர்வு முறை­க­ளில் மேலும் சந்­தே­கத்­தை­யும் மாண­வர்­க­ளின் எதிர்­கா­லம் மீது அர­சின் அலட்­சியப் போக்­கை­யும் சுட்­டி­க்காட்­டு­கின்­றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *