வலிமையான 2ஆவது தலைமுறை சீர்திருத்தங்கள் தேவை: கார்கே

1 Min Read

புதுடில்லி, ஜூலை 26- கடந்த 1991ஆம் ஆண்டில் தாராளமயமாக்கல் கொள்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டினை நினைவு கூர்ந்துள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தற்போது மீண்டுமொரு அர்த்தமுள்ள வலிமை யான 2ஆவது தலைமுறை சீர்திருத்தங்கள் தேவைப் படுவதாகக் கருத்து தெரி வித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “கடந்த 1991 ஜூலை தாரா ளமயமாக்கல் பட்ஜெட் இந்திய வரலாற்றில் முக் கியமான தருணத்தை குறித்தது. அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் தலைமையில் நிதிய மைச்சர் மன்மோகன் சிங் பொருளாதார சீர்திருத்தத்தின் புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்தார். அந்தத் தொலைநோக்குப் பார்வை நாட்டில் புரட்சியை ஏற்படுத்தியது, மத்தியதர வர்க்கத்தினரை மேம்படுத்தியது, மேலும் லட்சக்கணக்கானவர்களை வறுமை மற்றும் விளிம்புநிலையில் இருந்து உயர்த்தியது.

நாட்டின் வளர்ச்சிப் பாதையைத் தூண்டி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் இந்த அற்புதமான சாதனையில் காங்கிரஸ் கட்சி பெரு மிதம் கொள்கிறது. இன்று மீண்டும் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பின்தங்கியவர்கள் மேம் பாடு அடைய உதவும், அர்த்தமுள்ள வலுவான இரண்டாவது தலைமுறை சீர்திருத்தத்துக்கான ஓர் அவசரத் தேவை உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் காங்கிர ஸின் ஊடகப் பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “33 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்தியாவில் புதிய தொழில் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. மாற்றத்துடன் கூடிய நீடித்த வளர்ச்சி என்ற தத்துவத்துடன் தொகுக்கப்பட்ட பொரு ளாதார மாற்றத்துக்கு அது வழி வகுத்தது. கடந்த 1991 ஜூலை 24இன் நிகழ்வுகள் மற்றும் பின்னணிகளை, To the Brink and Back: India’s 1991 Story என்பதில் எழுதியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *