ஜெனீவா, ஜூலை 26- இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறை நடை பெறுவதாக அய்.நா. மனித உரிமைகள் குழு கவலை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தி யாவில் கிருத்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தி னர், பழங்குடியினா், ஒரே பாலின ஈா்ப்பாளா்கள், இரு பாலின ஈா்ப்பா ளா்கள், மூன்றாம் பாலினத்தவா் ஆகிய சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்பட்டு, வன்முறை நடைபெறுகிறது.
இந்தப் பாகுபாடுக்கு எதிராக விரிவான சட்டங்களை அமல்படுத்துதல், பொதுமக்கள் இடையே விழிப்புணா்வு ஏற்படுத்துதல், பன்முகத்தன்மைக்கு மதிப்பளிப்பதை ஊக்குவிக்க அரசுப் பணியாளா்கள், சட்டம்-ஒழுங்கு அமலாக்க அதிகாரிகள், நீதித்துறை மற்றும் சமூகத் தலைவா்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகிய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், தீவிர வாதத்துக்கு எதிரான சட்டங்களின் சில பிரிவுகள் பன்னாட்டு உடன்படிக்கைக்கு ஏற்ப இல்லை.
மணிப்பூா், ஜம்மு-காஷ்மீா் மற்றும் அசாமில் உள்ளதைப் போன்ற சில பதற்றமான பகுதிகளில் தீவிரவாதத்துக்கு எதிரான சட்டங்கள் பல ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்கள் பரந்த அளவில், படுமோச மான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்துள்ளன.
இந்த விவகாரத்தில் பன்னாட்டு உடன்படிக்கைக்கு இணங்கி இந்தியா செயல்பட வேண்டும். அத்துடன் பதற்றமான பகுதிகளில் பயங்கர வாதத்துக்கு எதிரான மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்காலிக மாகவும், நீதித்துறை மறுஆய்வுக்கு உள்பட்டதாகவும் இருப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும்.
பதற்றமான பகுதிகளில் நடைபெறும் மனித உரிமை மீறல் நிகழ்வுகளில், உண்மையை கண்டறிவதற்கான நடைமுறையை தொடங்குவதற்கு பிரத்யேக வழிமுறையை இந்தியா நிறுவ வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.