தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் – யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் 13ஆம் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திடுவோம்!

2 Min Read

ஈரோட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவு

ஈரோடு, ஜூலை 23- யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் 31ஆம் ஆண்டில் ஈரோட்டில் நடைபெற உள்ள 13-ஆம் மாநில மாநாடு சிறப்புடன் நடந்தேறிட இன்று 21.7.2024 ஈரோட்டில் உள்ள மாயாபஜார் – சுபிக்ஷா அரங்கத்தில், உறுப் பினர்கள் கலந்துரையாடல் கூட்டம் காலை 11 மணிக்கு நடை பெற்றது.
சங்கத்தின் பொதுச் செயலா ளர் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சங்கத்தின் அமைப்புச் செயலாளர் பி.சதீஷ் குமார், பிராந்திய செயலாளர்கள் வித்யா (திருப்பூர்), கிருஷ்ணன் (கோவை) மற்றும் மணிகண்டன் (சேலம்), பிற நிர்வாகிகள், சங்கத்தின் நிறுவன உறுப்பினர் இரா.இராசு, தோழியர் மங்கையர்க் கரசி உள்ளிட்ட மத்திய குழு உறுப்பினர்கள், மற்றும் கிளை களில் இருந்து வருகை தந்த தோழர்கள், மாநாடு வெற்றி பெற தங்களின் ஒத்துழைப்பை வெளிப்படுத்தினர்.

கலந்துரையாடல் கூட்டத்தில் சங்கத்தின் ஆலோசகர் டி.ரவிக் குமார், மாநாட்டையொட்டி வெளியிடப்படும் மலரில், நமது நல சங்க ஆர்வலர்களின் விளம்பரங்களை பெற்றுத் தர வேண்டும் என்பதை வற்புறுத்தி பேசினார்.
மாநாட்டின் நோக்கம், நல சங்கத்தின் 30 ஆம் ஆண்டு கால வரலாறு குறித்து சங்கத்தின் தலைவர் கோ.கருணாநிதி விரிவாக எடுத்துரைத்து, மாநாட்டில் அனைத்து தோழர்களும் தவறாது கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
13-ஆம் ஆண்டு மாநாட்டின் முதல் அழைப்பிதழை தோழர் இரா.இராசு பெற்றுக் கொண்டார்.

மாநாடு சிறப்புடன் நடைபெற வரவேற்புக் குழு அமைக் கப்பட்டு, தோழர் சதீஷ்குமார் தலைவராகவும், தோழர்கள் வித்யா (திருப்பூர்), கிருஷ்ணன் (கோவை), எஸ்.குருநாதன் (சேலம்), தோழியர் மங்கையர்க்கரசி உள்ளிட்டோர் செயலாளர்களாகவும், மற்றும் திருப்பூர் பிராந்திய நிர்வாகிகள், ஈரோடு கிளைகளில் உள்ள தோழர்கள் வரவேற்புக் குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப் பட்டார்கள்.
ஈரோடு கிளை மட்டுமல்லாது, அருகாமையில் உள்ள கிளைகளில் இருந்தும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தந்தை பெரியார் பிறந்த மண் – ஈரோட்டில், நல சங்கத்தின் 31 ஆம் ஆண்டில், ஆகஸ்ட் 10ஆம் நாள் நடைபெற உள்ள 13ஆம் மாநில மாநாடு புதிய வரலாறு படைக்கும் என்பதில் அய்யமில்லை.
* தோழர்களே வாருங்கள்! ஈரோட்டில் சங்கமிப்போம்.*
* சமூக நீதி குரலை எதிரொலிப்போம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *