ஆலத்தம்பாடி, ஜூலை 22- திருவாரூர் மாவட்டம், திருத் துறைப்பூண்டி ஒன்றியம், ஆலத்தம் பாடியில் 18.7.2024 அன்று மாலை 6:00 மணிக்கு சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா பரப்பரை கூட்டம் நடைபெற்றது.
பரப்புரை கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ச.பொன்முடி தலைமையில் கழக பேச்சாளர் இராம.அன்பழகன் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்வில் தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞரணி துணை செயலாளர் அ.ஜெ.உமாநாத், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் கே.அழகேசன், நகர தலைவர் சு.சித்தார்த்தன், நகரத் துணைச் செய லாளர் ப.சம்பத்குமார், மாராச்சேரி ச.சுரேஷ், ஒன்றிய இளைஞரணி தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சந்தோஷ், வீரக்குமார் விசிக, மாணவர் கழக வெற்றி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார் இறுதியாக ஒன்றிய துணைச் செயலாளர் ந.செல்வம் நன்றி கூறினார்.