வானத்தைக் காட்டி வைகுண்டம் காட்டும் கபோதிகள் சிந்தனைக்கு!
நிழல் இல்லா நாள் கண்டு களித்த மாணவர்கள்
கருநாடக மாநிலம் பெங்களூருவில் ‘ஜீரோ ஷேடோ டே’ எனப்படும் ‘பூஜ்ய நிழல் நாள்’ அறிவியல் மய்யங்களில் மாணவர்களுக்குக் காட்டப்பட்டது.
அனைத்து பொருட்களுக்கும் நிழல் இருக்கும். ஆனால் ஆண்டின் இரண்டு நாட்களில் மட்டும் இந்த நிழல் இருக்காது. இதைத்தான் ‘ஜீரோ ஷேடோ டே’ என்று அறிவியலாளர்கள் அழைப்பார்கள். அதாவது நாம் நடக்கும் போது நம்மைத் தொடர்ந்து நிழல் வரும் இல்லையா? இந்தக் குறிப்பிட்ட இரண்டு நாட்களில் மட்டும் நிழல் நம்மை பின் தொடராது. இதற்கு காரணம் சூரியனின் ஒளிக் கதிர்கள் செங்குத்தாக நம்மீது விழுவதுதான்.
அதாவது பூமியை இரண்டாக கற்பனை செய்துகொள்வோம். ஒன்று வடபகுதி, மற்றொன்று தென்பகுதி. இதை சரிசமமாக பிரிக்கும் கோடுதான் நிலநடுக்கோடு. இதிலிருந்து 23.5 டிகிரி மேலே வடக்காக இருப்பது கடக ரேகை என்று சொல்லப் படுகிறது. இதற்கு கீழே -23.5 டிகிரி இருக்கும் தென் பகுதிகள் மகர ரேகை என்று அழைக்கப் படுகிறது. இந்த இரண்டு பகுதியிலும் சூரியனின் வெளிச்சம் குறிப்பிட்ட நாட்களில் செங்குத்தாக விழும். அப்படியாகத்தான் ஆக.18 அன்றும் கடக ரேகை யில் சூரியனின் வெளிச்சம் செங் குத்தாக விழு கிறது.
நிலநடுக்கோட்டிலிருந்து 23.5 டிகிரி மேலே பார்த்தால் தென்னிந்தியா பகுதிகள் தெரியும். எனவே பெங்களூரில் நேற்று (18.8.2023) பூஜ்ய நிழல் நாள் கொண்டாடப்பட்டது. நம்முடைய நிழல் முழுவதும் நமது உடலிலேயே இருக்கும் என்பதால் அது தரையில் விழாது. இது ஒரு இயற்கையின் விநோதம் என்றே சொல்லலாம். ஏனெனில் கடக ரேகையிலும், மகர ரேகையிலும் உள்ள இடங்களில் மட்டும்தான் இந்த பூஜ்ய நிழலைக் காண முடியும்.
அதாவது இந்தியாவில் தமிழ்நாட்டில் தொடங்கி மத்தியப் பிரதேசம் வரையில் ஏதாவது இடத்தில் நிச்சயம் இந்த பூஜ்ய நிழல் நாளை பார்க்க முடியும். ஆனால் ராஜஸ்தான், டில்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதி களில் இதனை பார்க்க முடியாது. ஏனெனில் இந்த பகுதிகள் கடக ரேகையைத் தாண்டி இருக் கின்றன. எனவே சூரியனின் ஒளி செங் குத்தாக விழாது. இதனால் தான் இந்த பூஜ்ய நிழல் நாளை அறிவியல் ஆய்வாளர்கள் ஆர்வத் துடன் பார்க்கிறார்கள். தென் இந்தியாவில் 18.8.2023 அன்று நண்பகல் மணிக்கு பூஜ்ய நிழல் நாள் தெரிந்தது
எனவே பள்ளி, கல்லூரி, அறிவியல் மய்யங்களில் இதை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கு முன்னர் கடந்த 3ஆம் தேதி தெலங்கானா மாநிலம் அய்தராபாத்திலும் பூஜ்ய நிழல் நாள் கொண்டாடப்பட்டது. இந்த விநோத நிகழ்வு ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நீடித்ததால் மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் ஆர்வமாக கண்டு களித்தனர்.