பெல்ஜியம், ஜூலை 8 அய்ரோப்பிய யூனியன், காலநிலை மாற்றம், வெப்பம் காலநிலை மாற்ற கண்காணிப்பு அமைப்பான காப்பர்னிக்கஸ் சர்வீஸ் [C2C] நடத்திய ஆய்வில் 2023 ஜூன் முதல் 2024 ஜூன் வரையிலான காலகட்டம் மிகுந்த வெப்பம் நிறைந்த காலகட்டமாக பதிவாகியுள்ளது. மேலும் கடந்த ஜூன் மாதம் அதிக வெப்பம் நிறைந்த மாதமாக உள்ளது.
இதற்கு முன்னர் 1850 – 1900 ஆகிய ஆண்டுகளில் இடைப்பட்ட காலமே பூமியின் அதிக வெப்பமான ஆண்டுகளாகப் பதிவான நிலையில் சுமார் ஒரு நூற்றாண்டு கழித்து தற்போது 2023-2024 அதிக வெப்பமான காலகட்டமாகப் பதிவாகியுள்ளது அனைவரயும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்தாண்டு வரலாற்றில் உலகின் அதிக வெப்பநிலை கொண்ட ஆண்டாகப் பதிவாகும் என்றும் ஆய்வளார்கள் கணித்துள்ளனர்.
ஏற்கெனவே கடந்த ஆண்டின் வெப்பத்தை இந்த ஆண்டு முறியடித்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மனிதர்களின் செயலகளாலும், எல்- நினோ உள்ளிட்ட இயற்கை நிகழ்வுகளாலும் இந்த அதிகப்படியான வெப்பம் பதிவாகியுள்ளதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
ஹஜ் பயணத்தின்போது ஏற்பட்ட ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள், இந்தியாவில் ஏற்பட்ட 250 க்கும் மேற்பட்ட ‘ஹீட் ஸ்ட்ரோக்’ உயிரிழப்புகள் ஆகியவை ஆய்வாளர்களின் இந்தக் கூற்றை நிரூபிப்பதாக உள்ளது.
எல் நினோ உள்ளிட்டவை இயற்கை நிகழ்வுகள் என்பதால் அவற்றை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் மனிதர்களின் செயல்களான நிலக்கரி எரிப்பு, எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றால் ஏற்படும் காலநிலை தாக்கங்களைக் கட்டுப்படுத்த முடியும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் வரும் காலங்கள் மனித குலத்துக்கு சோதனை மிகுந்த காலமாக அமையும் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.