கவுகாத்தி, ஜூலை 7- வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான பாஜக ஆளும் அசாமில் கடந்த 5 வார காலமாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகளில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வரும் நிலையில், மொத்தமுள்ள 35 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன.
குறிப்பாக கடந்த 48 மணி நேரமாக அசாம் மாநிலத்தில் அதீத அளவில் கன மழை பொழிந்து வருவதால் மாநி லத்தின் வெள்ளப் பாதிப்பு நிலைமை மிகவும் மோச மடைந்துள்ளது.
20 மாவட்டங்களின் நிலைமை மோசம்
30 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் கைலாகண்டி, கசார், காம்ரூப், ஹோஜை, துப்ரி, நாகோன், மோரிகன், பார்பேட்டா, திப்ருகர், நல் பாரி, திமாஜி, போங்கைகான், லக்கிம்பூர், ஜோர்கட், சோனிட்புர், கோக்ராஜ்கர், கரிம்கஞ்ச், தெற்கு சல்மாரா, தர்ராங் மற்றும் தின்சுகியா ஆகிய 20 மாவட் டங்கள் தற்காலிக தீவுகளாக மாறியுள்ளன.
படகு போக்குவரத்து மூலம் மக்களை தேசிய பேரிடர் மீட்புப் பணியினர் மீட்டு வருகின்றனர். கனமழை வெள்ளத் தால் 24.50 லட்சம் பேர் முற்றிலும் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ள னர். வெள்ளத்தால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 64 ஆக (2024 முழு வதும்) உயர்ந்துள்ளது.
வெள்ளத்தால் அசாம் மாநிலமே மிதக்கும் நிலையிலும், மாநிலத்தை ஆளும் பாஜக அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மந்தமாகச் செயல்பட்டு வருகிறது. 30 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும் திப்ருகர் உள் ளிட்ட ஒன்றி ரண்டு மாவட்டங்களை மட்டும் மேற்பார்வையிட்டது போல ஷூட்டிங் எடுத்து காட்சிப் பதிவு வெளியிட்டு மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா அசாம் மக்களை ஏமாற்றி வருகிறார்.
குறிப்பாக ஒன்றிய மோடி அரசு அசாம் வெள்ளத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.