முதலமைச்சராக இருந்தாலும்…

கருஞ்சட்டை

மும்பையில் 28.06.2024 அன்று தனது மகனின் திருமண அழைப்பிதழைக் கொடுக்க மகாராட்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இல்லத்திற்கு தனது குடும்பத்தோடு சென்றார் அம்பானி. அப்போது குழுப் புகைப்படம் எடுப்பதற்காக முதலமைச்சருக்குப் பக்கத்தில் இல்லாததால், ‘‘பிரேமிலிருந்து வெளியே வருகிறீர்கள்; ஆகையால் கொஞ்சம் நெருங்கி நில்லுங்கள்’’ என்று ஆனந்த அம்பானியை நோக்கிப் புகைப்படக்காரர் கூறிட, ஆனந்த அம்பானி முதலமைச்சரின் தோளில் கைவத்து, ‘‘கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்‘‘ என்று கூறுகிறார். இந்தக் காணொலி வெளியான நிலையில், கடுமையான கண்டனங்கள் சமூக வலைதளத்தில் பரவின.

இதே போல் அம்பானி குடும்பத்தினர் தேவேந்திர பட்னவிஸ் அல்லது இதர உயர்ஜாதி அரசியல் பிரமுகர்களின் தோள் மீது கைவைத்து தள்ளிவிடமுடியுமா? என்று கேட்டு வருகின்றனர்
இந்த நிலையில் அதே நாள் மாலை மும்பையில் உள்ள பிரமாண்டமான ஜியோ அரங்கத்திற்கு மோகன் பாகவத் வருகை புரிந்தார்.
அப்போது அம்பானி குடும்பத்தினர் வரிசையாக மோகன் பாகவத்தின் காலில் விழுந்து வரவேற்றனர்.
எப்படி இருக்கிறது? முதலமைச்சராக இருந்தாலும், அவர் தலித் என்றால், தீண்டாமை தினவெடுத்து வருகிறதே!

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *