புதுடில்லி, ஜூலை 2- இந்திய தண்டனைச் சட்டம் (அய்.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய நிலையில் நேற்று (1.7.2024) முதல் அவை அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் காங்கி ரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதிய கிரிமினல் சட்டங் களை ‘புல்டோசர் சட்டங்கள்’ என்று விமர்சித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியதாவது, ‘மக்களவைத் தேர்தல் முடிவுகளால் மன ரீதியாக பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி யும் பாஜகவினரும் அர சமைப்பை மதிப்பது போல் தற்போது நாடகமாடத் தொடங்கியுள்ளனர்.
ஆனால் உண்மை என்னவென்றால் தற் போது அமலுக்கு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களும் நாடாளுமன்றதில் 146 உறுப்பினர்களை இடை நீக்கம் செய்துவிட்டு வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டதே ஆகும். எனவே இந்தியா கூட்டணி இந்த புல் டோசர் சட்டங்களை நாடாளுமன்றத்தில் பொறுத்துக் கொண்டிருக் காது’ என்று தெரிவித்து உள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த நாடா ளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்போது உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் வண்ணப் புகைக்குண்டை வீசினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டது. இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய அரசை எதிரித்து அமளி யில் ஈடுபட்டனர்.
இதனால் எதிர்கட்சி களைச் சேர்ந்த மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். எனவே எதிர்கட்சிகளை சேர்ந்த பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அவையில் இல்லாமலே புதிய கிரி மினல் சட்டங்களை அமல்படுத்தும் மசோதா நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.