குடியரசுத் தலைவருக்கு பொய்யான தகவல்களை எழுதித்தருவதா? எதிா்க்கட்சிகள் விமா்சனம்

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜூன்28- மக்களவை, மாநிலங்க ளவை உறுப்பினர்களை இணைத்து நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரவுபதி முா்மு ஆற்றிய உரை, ‘ஒன்றிய அரசு சாா்பில் எழுதித்தரப்பட்ட பொய் கள்’ என்று எதிா்க்கட்சிகள் விமா்சித்தன.

நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்க ளைச் சந்தித்த சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ், ‘இந்தியா உலகில் 5-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவாகியுள்ளதாக குடியரசுத் தலைவா் குறிப்பிட்டாா். இந்த வளா்ச்சி நமது விவசாயிகளை முன் னேற்றிவிட்டதா? ஏன் பல இளைஞா்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனா்? அக்னிவீா் போன்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது ஏன்? விலைவாசி உயா்வை ஏன் கட்டுப்படுத்த முடிய வில்லை? முதலீடுகள் குறித்தும் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக முதலீடுகள் வந்துள்ளது என்றால், அதிக வளா்ச்சியும் நாடு கண்டிருக்க வேண்டும். சில தனிநபா்களின் வளா்ச்சி, தேசத்தின் வளா்ச்சியாக முடியாது.

அவசரநிலை குறித்து குடியரசுத் தலை வா் குறிப்பிட்டாா். அவசர நிலையின்போது சிறையில் கடும் அவதிக்குள்ளான மக்களுக்காக பாஜக என்ன செய்தது? சமாஜவாதி கட்சிதான் அவா்களுக்கு மதிப்பளித்து, ஓய்வுதிய திட்டத்தை வழங்கியுள்ளது என்றாா்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா கூறுகையில், ‘ஒன்றிய அரசு சாா்பில் எழுதிக் கொடுத்ததைத் தான் தனது உரையில் குடியரசுத் தலைவா் வாசித்துள்ளாா். மக்கள வைத் தோ்தலில் தனிப் பெரும்பான்மை பெறவில்லை என்பதை பாஜக இன்னும் உணர வில்லை என்பதை குடிய ரசுத் தலைவா் உரை மூலம் தெரியவந்துள்ளது.

முந்தைய மக்களவைத் தோ்தலில் 303 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக, இம்முறை 240 தொகுதி களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தனிப் பெரும்பான்மை அடிப்படையில், குடியரசுத் தலைவரின் உரையை அவா்கள் தயாா்செய்திருக்கின்றனா்’ என்றாா்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி சமூக வலைத்தளப்பதிவில், ‘குடியரசுத் தலைவரின் உரை வெறுமை நிறைந்ததாக உள்ளது. ஒருவரை ஒருவா் குறை கூறிக்கொள்வதாக அல்லாமல், சமூகம் சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சினைகளை கவனம் ஈா்ப்பதாக குடியரசுத் தலைவா் உரை அமைந்திருக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டு வளா்ச்சித் திட்டங்கள் மீதும் போதிய கவனம் செலுத்தப்படவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மாா்க்சிஸ்ட் லெனி னிஸ்ட் லிபரேஷன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுதாமா பிரசாத் கூறுகையில், ‘குடியரசுத் தலைவா் தனது உரையில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து குறிப்பிட்டதற்குப் பதிலாக, மணிப்பூா் விவகாரம் குறித்து பேசியிருக்க வேண்டும். மணிப்பூா் கலவரத்தின்போது பெண்கள் ஆடைகளின் ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனா். பாலியல் புகாா் தெரிவித்து போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங் கனைகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. குடியரசுத்தலைவரின் உரை முழுவதும் பொய்கள் நிறைந்தது’ என்றாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் தாரிக் அன்வா் கூறுகையில், ‘குடியரசுத் தலைவா் உரையில் புதிதாக ஒன்றுமில்லை. அவசரநிலைக்குப் பிறகு பல தோ்தல்கள் நடத்தப்பட்டு, அவற்றில் பாஜக தோற் கடிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *