காரைக்குடி மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் மானமிகு ச.அரங்கசாமி (வயது 81) அவர்கள் நேற்று (24.06.2024) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவராக 20 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவர்.
ஓய்வுக்குப்பின் காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவராக 12 ஆண்டுகள் பணியாற்றியவர். அவர் பணியாற்றிய ஊர்களில் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் நான் பல முறை பங்கேற்று இருக்கிறேன். இயக்க கூட்டங்களை சொற்பொழிவாளர்களை அழைத்து பிரச்சாரக் கூட்டங்களை ஆர்வமுடன் நடத்தியவர்.
சிறிது காலமாக உடல் நலம் குன்றியிருந்த நிலையிலும் தடி ஊன்றிக் கொண்டு கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இயக்க வீரர்.
அவர் பிரிவால் துயருறும் அவரது வாழ்விணையர் சாரதா, அவரின் செல்வங்கள் பொன்மலர்-இரவி, வண்டார் குழலி-செல்வம் ஆகியோர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை தலைவர்
25.6.2024 திராவிடர் கழகம்