நாமக்கல், ஜூன் 25- திருநங்கைகளும் இந்த சமுதாயத்தில் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து, முதல் மாநிலமாக “தமிழ்நாடு இந்தியாவிலேயே திருநங்கைகள் நலவாரியத்தை” 15-.4.-2008 அன்று தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டது. திருநங்கைகளின் நலன், சமூகப் பாதுகாப்பு, சமூக அங்கீகாரம் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
திருநங்கைகளின் நலனை மேம் படுத்தும் விதமாக, “திருநங்கைகள்” என்ற கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டு அவர்களது சுய விவரங்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் திருநங்கைகள் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டு மனை பட்டா, குடியிருப்பு வீடுகள், தையல் இயந்திரம், உயர் கல்வி உதவித்தொகை, சுய உதவிக் குழுக்கள் உருவாக்குதல் உள்ளிட்டவற்றைக்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், திருநங்கையர் வாழ்வா தாரத்தினை உயர்த்திடும் வகையில் தொழில் செய்திட மானியத் தொகை ரூ.50,000 மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,500/- வழங்கப்பட்டு வருகிறது.
திருநங்கையர்களை ஊக்குவிக்கும் விதமாக, திருநங்கையர் நாளான ஏப்ரல் 15-அன்று ஒரு திருநங்கைக்கு ரூ.1,00,000/க்கான காசோலை மற்றும் சான்றிதழ் அடங்கிய மாநில அளவிலான “திருநங்கைக்கான விருது 2020-ஆம் ஆண்டு முதல் வழங்கப் பட்டு வருகிறது.
திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், திருநங்கை களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிப் பதற்கும். திருநங்கைகளுக்கு சென்னை அண்ணா மேலாண்மை நிறுவனம் மூலம் திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 171 திருநங்கைகள் கண்டறியப்பட்டு அதில் 158 திருநங்கை களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
40 வயதிற்கு மேல் உள்ள 50 திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.1,500/- ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 12 திருநங்கைகளுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக சுயதொழில் மானியம் தலா ரூ.50,000/- வீதம் மொத்தம் ரூ.6,00,000/- வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவா்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திருநங் கைகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஒரே இடத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாகவும், பிற துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விதமா கவும் திருநங்கை களின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கிடும் வகையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடத்திட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், துறையூர் சாலை, நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில், மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினருமான எஸ்.எம்.மதுராசெந்தில் முன்னிலையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப் பினரும், நாமக்கல் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் 46 திருநங்கை களுக்கு ரூ.3.93 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில திமுக சமூக வலைதள பொறுப்பாளரும், திருநங்கை நலவாரிய குழு உறுப்பினருமான அ.ரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் பயன்பெற்ற திரு நங்கை ரேவதி கூறும் போது, நான் மாதிரிப் பள்ளிகளில் ஆளுமை வளர்ச்சி மேற்கொள்ளப்படும் அணியில் பணிகள் மேற்கொண்டு வருகிறேன். இன்றைக்கு எனது சொந்த ஊரில், நான் பிறந்த ஊரில் நாமக்கல்லில் திருநங்கை களுக்கான முகாம் நடைபெற்று வருகிறது.
இந்தியாவிலேயே திருநங்கைகள் நலவாரியம் முதல்முதலாக தமிழ் நாட்டில் கலைஞர் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது. அதே வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் திருநங்கைகளுக்கு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள்.
அந்த வகையில் மாதாந்திர ஓய்வூதியம், கட்டணமில்லாப் பேருந்து பயணம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருநங்கைக ளுக்கு வேலைவாய்ப்பில் இட ஓதுக்கீடு செய்வதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை எங்களுக்காக கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி.
திருநங்கை ஆர்த்தி கூறும் போது,நான் நாமக்கல் பகுதியில் வசித்து வருகிறேன். திருநங்கைகளின் நலனை மேம்படுத்தும் விதமாக ஓரே இடத்தில் அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, வாக் காளர் அடையாள அட்டை ஆகியவை பெறுவதற்கு நாமக்கல் மாவட்ட திருநங்கைகளுக்கு சிறப்பு முகாமினை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள்.
மேலும் இம்முகாமில் எங்களுக்கு தையல் இயந்திரம், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்கள். எங்கள் நலனில் அக்கறை கொண்டு இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
– இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.