தன்னை வெற்றி பெறச் செய்த வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தி நன்றிக் கடிதம்

viduthalai
2 Min Read

வயநாடு, ஜூன் 24- வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய ராகுல் காந்தி, அந்த தொகுதி மக்களுக்கு உணர்வுப்பூர்வ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்த லில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் 2 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். வென்ற 2 தொகுதிகளில் ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டியது கட்டாயம் என்பதால் அவர் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறார். ரேபரேலி தொகுதியை தக்க வைக் கிறார்.
அதே நேரம் ராகுல் பதவி விலகியுள்ள வயநாடு தொகுதியில் அவரது சகோதரியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்காவை களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது.

தங்கள் தொகுதியில் இருந்து ராகுல் வெளியே றியதால் வயநாடு மக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர் எனினும் அவரது சகோதரியே மீண்டும் களமிறங்குவது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இந்நிலையில் வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி நேற்று (23.6.2024) உணர்வுப்பூர்வமான கடிதம் ஒன்றை எழுதி யுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வயநாடு தொகுதிக்கு நான் புதியவனாக இருந்தபோதும் நீங்கள் என்னை நம்பினீர்கள். அளவற்ற அன்பு மற்றும் பாசத்தால் என்னை அரவணைத்தீர்கள். நீங்கள் எந்த அரசியல் உருவாக்கத்தை ஆதரித்தீர் கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர், எந்த மதத்தை நம்புகிறீர்கள் அல்லது எந்த மொழியில் பேசுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. நான் நாளுக்கு நாள் அவமதிப்பை எதிர் கொண்டபோது உங் கள் நிபந்தனையற்ற அன்புதான் என்னை பாதுகாத்தது. நீங்கள்தான் எனக்கு அடைக்கலமாக, எனது வீடாக, எனது குடும்பமாக இருந்தீர்கள். நீங்கள் என்னை சந் தேகப்படுவதாக நான் ஒரு நொடி கூட உணரவில்லை.

வயநாட்டில் நான் ஆற்றும் உரைகளை ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இளம்சிறுமிகள் மொழி பெயர்த்து பேசும் துணிச் சல், அழகு மற்றும் நம்பிக்கையை மறக்க முடியாது. எனக்கு மிகவும் தேவைப்படும்போது நீங்கள் எனக்குக் கொடுத்த அன்பு மற்றும் பாதுகாப்பிற்காக உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என தெரியவில்லை. நீங்கள் எனது குடும் பத்தின் அங்கமாக இருக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொருவருடனும் நான் எப்போதும் இருப்பேன்.

எனது சகோதரி பிரியங்காவுக்கு நீங்கள் வாய்ப்பு அளித்தால் அவர் வயநாட்டை பிரதி நிதித்துவப்படுத்துவார். உங்கள் தொகுதி மக்களவை உறுப்பினராக அவர் மிகச்சிறந்த பணியை செய்வார்.

-இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *