சென்னை, ஜூன்22- இந்தியாவில் நிதி வர்த்த கத்தில் முன்னணி இடத்தை வகித்து வரும் சிறீராம் குழும நிறுவனங்களின் ஒரு அங்கமாகிய சிறீராம் இலக்கியக் கழகம், வரும் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 25 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ / மாண வியரிடையே திருக்குறள் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்த இருக்கிறது.
நடைபெறும் இடங்கள்:
இப்போட்டிகள், 12 மையங்களில் நடத்தப்படும். சென்னையில், ஜூலை 20 அன்று அண்ணா நகரில் உள்ள சி.எஸ்.அய். ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், ஜூலை 27 அன்று கிழக்கு தாம்பரத்திலுள்ள கிறிஸ்து ராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது. சென்னை தவிர, ஜூலை 21 வேலூரிலும், ஜூலை 28 புதுச்சேரியிலும், ஆகஸ்ட் 3 கோவையிலும், ஆகஸ்ட் 4 ஈரோட்டிலும், ஆகஸ்ட் 10 சேலத்திலும், ஆகஸ்ட் 11 திருச்சியிலும், ஆகஸ்ட் 17 தஞ்சாவூரிலும், ஆகஸ்ட் 18 திருவாரூரிலும், ஆகஸ்ட் 24 நெல்லையிலும், ஆகஸ்ட் 25 மதுரையிலும் நடைபெறவுள்ளது.
இடைநிலை (6 – 8 ஆம் வகுப்புகள்), மேல் நிலை (9 – 12 ஆம் வகுப் புகள்), கல்லூரி என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப் படுகின்றன.
இதில் பங்கு பெற விரும்புவோர் இதற் கான விண்ணப்பப் படி வத்தினை அருகிலுள்ள சிறீராம் சிட்ஸ் கிளை களில் பெற்றுக் கொள் ளலாம். அல்லது www.shriramchits.com என்ற இணையதளத்தில் இருந்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாணவ சமுதாயத்தின ரிடையே திருக்குறளின் கருத்துகளைப் பரப்பவும், தமிழாற்றலை வளர்க்கவும், வரையும் திறனை ஊக்குவிக்கவும் கடந்த 1988-ஆம் ஆண்டு முதல் இப்போட்டியினை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.