புதுடில்லி, ஜூன்21- நாடு முழுவதும் வரலாறு காணாத வெப்ப அலை நிலவி வருவதால், 40 ஆயிரம் பேருக்கு வெப்ப வாதம் ஏற்பட்டுள்ளது. 110 பேர் வெயில் கொடுமை தாங்க முடியாமல் உயிரிழந்து விட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் துவங்கிய வெப்ப அலையின் தாக்கம், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இன்னமும் நீடிக்கிறது.இந்த வரலாறு காணாத வெப்ப அலையால் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. வெப்ப அலையால் பொது மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
இது பற்றிய புள்ளி விவரங்களை ஒன்றிய சுகாதார துறையின் தேசிய நோய் கட்டுப்பட்டு மய்யம் நேற்று (20.6.2024) வெளியிட்டது.
அதன் விவரம்: நாடு முழுவதும் வெப்ப அலை காரணமாக கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் கடந்த 18ஆம் தேதி வரை மொத்தம் 110 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக உ.பி.யில் 36 பேர் பலியாகி உள்ள னர். இது தவிர பீகார், ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பலி எண்ணிக்கை அதி கமாக உள்ளது.
தரவுகளின்படி, ஜூன் 18 அன்று மட்டும் வெப்பத் தாக்குதலால் 6 பேர் இறந்துள்ளனர். மேலும், 40ஆயிரம் பேருக்கு வெயில் தாங்காமல் வெப்ப வாதம் ஏற்பட்டுள்ளது.
-இவ்வாறு கூறப் பட்டுள்ளது.
இந்த விவரங்கள் அர சுக்கு இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், பல மாநிலங் களில் இருந்து இன்னமும் தரவுகள் வந்து கொண் டிருப்பதால், பலி எண்ணிக்கையும், வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் இன்னமும் அதிகமாகும் என்று ஒன்றிய சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.