“உங்கள் கல்விக்கு எந்தத் தடையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு! எதிலும் கவனத்தைச் சிதற விடாமல், எங்கேயும் தேங்கி நின்றுவிடாமல் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதைத் தான் பதிலுக்கு உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்”!
சமீபத்தில், பள்ளிக் கல்வித் துறை நடத்திய நிகழ்ச்சியில், ‘திராவிட மாடல்’ நாயகர் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் பேசியதன் சாரம் இது.
படிப்புதான் வாழ்க்கையை மாற்றும் என்பதற்கு, ஆதாரமாக தமிழ்நாடு பணியாளர் தேர்வா ணையப் போட்டித் தேர்வுகளில் வென்று, பதவி பெறும் பட்டி யலைப் பார்த்தாலே தெரியும். பரம்பரை பரம்பரையாகக் கூலித் தொழிலாளிகளாக இருப்பவர்களின் அடையாளத்தை, கல்விதான் மாற்றுகிறது. அதன் ஒரு சான்றாக இருக்கிறார் மன்னார்குடி நகராட்சி ஆணையாளராகப் பொறுப்பேற்றுள்ள துர்கா.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவர் சேகர். தூய்மைப் பணியாளர். அவரது மகள் துர்கா, அரசுப் பள்ளி, கல்லூரியில் படித்து, கடந்த 2022-இல் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். பின்னர், 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற முதன்மைத் தேர்விலும் வெற்றி பெற்றார். இறுதியாக, 2024-இல் நடந்து முடிந்த நேர்முகத் தேர்வில் 30க்கு 30 மதிப்பெண் பெற்று வெற்றிபெற்ற துர்கா, தற்போது மன்னார்குடி நகராட்சி ஆணையாளராகப் பொறுப்பேற்றுள்ளார். சேகர் மட்டுமல்ல, சேகரின் தந்தையும் தூய்மைப் பணி யாளர்தான். இப்படி வழிவழியாக தூய்மைப் பணியாளர், சலவைத் தொழி லாளி, கூலித் தொழிலாளர் என ஒடுக்கப்பட்டவர்களின் அடை யாளத்தை மாற்றி இருக்கிறது கல்வி. இந்த மாற்றத்தை உருவாக்க, கல்வியால் மட்டுமே முடியும். அதற்காகத்தான் ‘படி’, ‘படி’ என கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது, ‘திராவிட மாடல் அரசு’.