லக்னோ, ஜூன் 9- ‘உத்தரப் பிரதேசத்தில் எதிர்மறை அரசியல் முடிவுக்கு வந்துள்ளது; நேர்மறை அரசியல் தொடங்கியுள்ளது’ என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் தெரி வித்தார்.
நாட்டிலேயே அதிக பட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளிலும், பாஜக 33 தொகுதிகளிலும், காங் கிரஸ் 6 தொகுதிகளிலும் பிற கட்சிகள் 4 தொகுதி களிலும் வென்றன. மொத் தமாக ‘இந்தியா’ கூட்டணி 43 தொகுதிகளில் வென் றது. பாஜக ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ‘இந்தியா’ கூட்டணி பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளைப் பிடித்தது மாநில எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி, காங்கிரசுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் தேர் தல் வெற்றி குறித்து உத் தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சி அலு வலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அகிலேஷ், ‘‘இந் தியா” கூட்டணியும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் வெற்றி பெற்றுள்ளனர். சமாஜ்வாதி கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. சமாஜ்வாதி கட்சிக்கு மக்களின் ஆதரவு பெருவாரியாகக் கிடைத் துள்ளது. அதே நேரம், கட்சிக்கு பொறுப்புகளும் அதிகரித்துள்ளன. மக்களவையில் சமாஜ் வாதிக்கு கிடைத்த வெற்றி, அதிகப்படியாக மக்களுக்குச் சேவை செய்வதற்காகக் கிடைத் தது. உத்தரப் பிரதேசத்தில் வெறுப்பு மற்றும் எதிர்மறை அரசியல் முடிவுக்கு வந்துள்ளது. நேர்மறை அரசியல் தொடங்கியுள்ளது’ என்றார்.
நீட் நுழைவுத் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகளைக் கண்டறிய உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என்று அகிலேஷ் வலியுறுத்தினார்