அவர்கள் சென்றால் நாடாளுமன்றம் நாம் சென்றால் கேண்டீனா?
(40 தொகுதிகளில் வெற்றி பெற்றும் தமிழ்நாட்டு எம்.பி. களால் எதுவும் செய்ய முடியாது, நாடாளுமன்றக் கேண்டீனுக்குத்தான் செல்ல வேண்டும் என்று சிலர் சொல்வதற்குப் பதில்)
உயர்ஜாதியினரான அவர்கள் சென்றால் நாடாளுமன்றம்! நாம் சென்றால் நாடாளுமன்றம் கேண்டீனாம்!! அவர்கள் ஆசிரியர் பணி செய்த போது “குரு” தெய்வம். நாம் ஆசிரியர் பணிக்குச் சென்றால் “வக்கத்தவனுக்கு” வாத்தியார் வேலை!! அவர்கள் முதலிடம் பிடித்தால் மெரிட் – நாம் முதல் மதிப்பெண் வாங்கினால் “குவாலிட்டியே” போச்சு!!
கடந்த ஆண்டு நாடாளுமன்ற அலுவலகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி சிறந்த செயல்பாடுகளில் முதல் இடம் பிடித்தவர் குஜராத்தின் திருமதி. யமியாஜினிக் இரண்டாம் இடம் எனக்கு, மூன்றாம் இடம் மராட்டியத்தின் திருமதி.பவுஸியாகான்.
நாங்கள் மூவரும் அந்த சோ கால்டு உயர்ஜாதியும் அல்ல. பிஜேபியும் அல்ல!! நாங்கள் மூவருமே எதிர்கட்சிக்காரர்கள்!! நீங்கள் எப்போதும் போல் உங்கள் உயர் ஜாதி திமிர்த்தனப் பேச்சைத் தொடருங்கள்; நாங்கள் மக்கள் பணியைத் தொடருகிறோம்.
– புதுகை எம்.எம்.அப்துல்லா
மாநிலங்களவை உறுப்பினர், திமுக
இஸ்லாமியர் இடஒதுக்கீடு தொடரும்
ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் வறுமையில் வாடும்போது ஒரு நாடோ, ஒரு மாநிலமோ வளர்ச் சியடைந்ததாகச் சொல்ல முடியாது, குறைந்த பிரதி நிதித்துவம் கொண்ட சமூ கங்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் வகையில் திட்டங்களைக் கொண்டு வர வேண்டியது ஓர் அரசின் கடமையாகும் – இஸ்லாமியருக்கு 4% இடஒதுக்கீடு வழங்கியிருப்பது அந்த நோக்கில்தானே ஒழிய, அரசியல் லாபங்களுக்காக அல்ல
– நரலோகேஷ்
தெலுங்குதேசம் கட்சி