அமைச்சர் சிவசங்கர் உத்தரவு
சென்னை, ஆக. 31- பெண்களுக்கான இலவச பேருந்துகளை மலைப்பகுதியிலும் இயக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அதி காரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளு டன் அமைச்சர் சா.சி.சிவசங்கர் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (30.8.2023) ஆய்வு மேற் கொண்டார். அப்போது, அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற விடியல் பயணத் திட்டத்தை மலைப்பகுதியில் உள்ள பெண்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்த ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் அறிவுறுத்தினார்.
புதிய பேருந்துகளை அறிமுகப் படுத்துவது, பழைய பஸ்களை புதுப்பித்து இயக்குவது ஆகிய பணிகளை விரைவுப் படுத்தி டவும், பணிக்கு தவறாமல் வருகை புரிந்து பஸ்களை இயக்கிட ஏது வாக பணிக்கு வராத பணியாளர்களுடன் கலந்து ரையாடவும் கேட்டுக் கொண்டார். காலிப்பணியிடங் களை நிரப்பிட ஏதுவாக பணியா ளர் நியமனத் திற்காக இணைய தளம் மூலம் விண்ணப்பம் சமர்ப் பிக்கும் முறை யின் நிலையை ஆய்வு செய்தார்.
அரசுப் போக்குவரத்து கழகங்க ளில் கூடுதல் வருவாய்க்காக அமைக் கப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனைய கங்கள், மின்சார செலவை குறைப்பதற்காக மேற் கொள்ளப்படும் சூரிய மின் தகடுகள் நிறுவுதலின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து அந்தப் பணியை விரைவுபடுத்த உத்தர விட்டார் மழைக் காலம் தொடங்கி விட்டதால் மக்கள் எந்தவித இடர் பாடும் இன்றி பேருந்துகளில் பயணிக்க ஏதுவாக குறைபாடு களை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, போக்குவரத்துத்துறை சிறப்பு செயலாளர் வெங்கடேஷ், அனைத்து போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.