‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக.23- அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் பயன் எந்தளவுக்கு மாணவா்களைச் சென்றடைகிறது என்பதை கண்காணிப்பு அலுவலா்கள் திறம்பட ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களின் அடிப்படை கற்றலை மேம்படுத்தும் நோக்கில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

மாநில அடைவு ஆய்வு மற்றும் அடிப்படை கற்றல் நிலை மதிப்பீடுகளின் அடிப்படையில் கற்றல் இடைவெளியை குறித்து, ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் வகுப்பு நிலைக்கு ஏற்ப தமிழ், ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன்களை முழுமையாக கற்றுக் கொள்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் ஆக்கப்பூா்வமான செயல்பாட்டுக்காக கண்காணிப்பு அதிகாரி களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

அவ்வாறு பள்ளிகளில் கல்வி சாா்ந்த செயல் பாடுகளை ஆய்வு மேற் கொள்ளும்போது வகுப்பறை நடைமுறைகள், ஆசிரியா்கள் மாணவா்கள் வேலை புத்தகம், ஆசிரியா்கள் வேலை புத்தகம் பயன்படுத்தும் வகையில், மாணவா்களின் பங்கேற்பு நிலை, தனிப்பட்ட கற்றல் வழிகாட்டல் வழங்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்யவேண்டும்.

மேலும் மாதாந்திர மற்றும் காலாண்டு மதிப்பீடுகள் மூலம் மாணவா்களின் முன்னேற்றம் பதிவு செய்யப்படவேண்டும்.

பயிற்சியில் கற்ற அறிவு மாணவா்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதையும் உறுதி செய்யவேண்டும். இதனை தங்கள் நிா்வாக எல்லைக்குள் உள்ள அனைத்து பள்ளி களுக்கும் மாதாந்திர அடிப்படையில் பயண திட்டங்களை தயாரித்து ஆய்வு செய்யவேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *