புதுடில்லி, ஜூன் 6- பாஜக தலைமையிலான கூட்டணி அரசு ஒன்றி யத்தில் அமைவது உறுதி யாகிவிட்ட நிலையில், கூட்டணிக் கட்சித் தலை வா்களான சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ்குமாரும் முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சா் பதவிகளை தங்களுக்கு தர வேண்டும் என்று கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தோ்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்ட ணிக் கட்சிகளின் ஆதரவு நிச்சயமாகத் தேவை. எனவே, அவா்களுக்கு அமைச்சரவையிலும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நிா்ப்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.
அதன்படி 16 மக்களவை உறுப்பினர்களை வைத்துள்ள சந்திரபாபு நாயுடு தலை மையிலான தெலுங்கு தேசம் கட்சி, சுகாதாரம், ஊரக வளா்ச்சித் துறை, போக்குவரத்து, வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், நீா் வளத்துறை (ஜல் சக்தி), நிதித்துறை இணையமைச்சா் பதவி உள்ளிட்டவற்றை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீகாா் முதலமைச்சரும், அய்க்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா் கோரும் அமைச்சரவை இடங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை. அதே நேரத்தில் பொதுச் செயல்திட்டம் வகுக்க வேண்டும், பீகாருக்கு சிறப்பு தகுதி, சிறப்பு நிதி தர வேண்டுமென அவா் கோரியுள்ளதாக தெரிகிறது.
கருநாடகாவின் மேனாள் முதலமைச்சர் தேவெ கவுடாவின் மதச்சாா்பற்ற ஜனதா தளமும் பாஜக கூட்டணியில் உள்ளது. கருநாடகத்தில் இரு மக்களவைத் தொகுதிகளில் வென்றுள்ள அக்கட்சி, நாடாளுமன்ற உறுப்பி னரும், தேவெகவுடாவின் மகனுமான குமாரசாமிக்கு ஒன்றிய வேளாண்மைத் துறை அமைச்சா் பதவியை எதிா்பாா்க்கிறது.
மகாராட்டிர முதல மைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனை கட்சி ஒன்றிய அமைச்சரவையில் இடம் கோரவில்லை என்று அறிவித்துவிட்டது.
மறைந்த ஒன்றிய அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (பாஸ்வான்) கட்சிக்கு 5 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனா். அக்கட்சிக்கும் ஒன்றிய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.