சென்னை, ஜூன் 1- தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறன், 36,671 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது என்று தமிழ்நாடு அரசு பெருமிதமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
உலகை ஒளிமயமாக்கும் அற்புத அறிவியல் சக்தி “மின்சாரம்”. தமிழ்நாட்டை வளப்படுத்திடும் வலிமை மிக்க சக்தியாகத் திகழ்கிறது. இன்று நூற்றாண்டு நிறைவு விழா காணும் மேனாள் முதலமைச்சர் கலைஞர் 1974ஆம் ஆண்டில் அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சார இணைப்புகளை வழங்கி, இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லாத கிரா மங்களே இல்லை எனும் சாதனையைப் படைத்தவர். 1990ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன் முதலாக விவசாய ‘பம்ப்’ செட்களுக்கு இலவச மின்சாரம் வழங்கி, வேளாண் உற்பத்தி பெருகச் செய்தவர் கலைஞர்.
மின் இணைப்பு
இன்று, அவர் வழியில் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மின் உற்பத்திக்காகப் புதிய பல திட்டங்களை உருவாக்கி வருகிறார். ஆட்சிப்பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடங்கி வைத்த மின்னகம் வழி யாக, மக்கள் இருந்த இடத்தில் இருந்தே இதுவரை தெரிவித்த 23 லட்சத்து 97 ஆயிரத்து 957 புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு 99.82 சதவீத புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி திறன்
திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற 2021ஆம் ஆண்டில் 32,595 மெகா வாட்டாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறன், தற்போது 36,671 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் கட்டமைப்பு, 30-4-2024 அன்று ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 454.32 மில்லியன் யூனிட் மின்சாரத்தையும், 2.5.2024 அன்று 20,830 மெகா வாட் உச்ச மின் தேவையையும் எவ்விதத் தடங்கலும் இன்றி வழங்கி சாதனை படைத்துள்ளது.
10-9-2023 அன்று காற்றாலை மூலம் பெறப்பட்ட அதிகபட்ச மின் உற்பத்தி 120.25 மில்லியன் யூனிட்டுகளும் 23.4.2024 அன்று சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற அதிகபட்ச மின் உற்பத்தி 40.50 மில்லியன் யூனிட்டு களும் தமிழ்நாடு மின்சார தேவைகளை ஈடுசெய்வதில் பெரிதும் துணை புரிந்துள்ளன.
மின் கட்டணம் குறைப்பு
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம். 2023-24ஆம் நிதி ஆண்டிற்கான உயர்த்தப்பட்ட மின் கட்டண ஆணைக்கு ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 23வரையிலான நுகர்வோர் விலைக் குறியீட்டுக்குப் பதிலாக ஆகஸ்டு 2022 முதல் ஏப்ரல் 2023 வரையிலான நுகர்வோர் விலைக் குறியீட்டைக் கருத்தில் கொள்ளுமாறு, கொள்கை உத்தரவு பிறப்பித்தது
இதன் மூலம் மின் கட்டண உயர்வு 4.7 சதவீதத்தில் இருந்து 2.18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது குறைக்கப்பட்ட மின் கட்டணத்தினால் 3.30 கோடி நுகர்வோர்கள் பயனடைந்து வருகின்றனர்.
கட்டணச் சலுகை
2.36 கோடி வீட்டு நுகர்வோர்களுக்கு. 1-7-2023 முதல் 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் மக்களிடம் சுமத்தாமல் அரசே ஏற்று மக்களைக் காத்துள்ளது. அரசு சிலவகை, அடுக்குமாடி குடியிருப்பு களுக்கு, கட்டணச் சலுகையாக தாழ்வழுத்த வீதப்பட்டி அய்டியின் கீழ் உள்ள பொதுவான வசதிகளுக்கான கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.8,15இல் இருந்து ரூ.5.50ஆக குறைத்து, ரூ.2.65-அய் மானியமாக வழங்குகிறது.
இதற்காக புதிதாக தாழ்வழுத்த வீதப்பட்டி அய்.இ. அறிமுகப்படுத்தி 1.11.2013 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீதப்படி மின்தூக்கி வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுவிநியோகம் அதாவது 10 குடியிருப்பாளர்களுக்கு குறைவாகவோ அல்லது சமமாகவோ மற்றும் பொதுவான விளக்குகள் மற்றும் நீர் விநியோகத்திற்காக தளங்களுக்கு குறைவாகவோ அல்லது சமமாகவோ உள்ள சிறிய அடுக்கு மாடி குடியிருப்பு களுக்கு பொருந்தும்.
மின் தடையே இல்லை
எல்.டி. 3 பி-ன் கீழ் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் 10-11- 2023 முதல், சூரிய ஒளி மேற் கூரை மின் உற்பத்திக்கான வலையமைப்பு கட்ட ணத்தினை 50 சதவீதம் குறைத்துள்ளது. இந்த 50 சதவீதம் குறைக்கப்பட்ட வலையமைப்பு கட்டணத்தினால் தமிழ்நாட் டில் உள்ள 3.11 லட்சம் தொழில் நிறுவனங்கள் பயன் பெறுகின்றன.
இப்படி, 3 ஆண்டுகளாக மின் தடையே இல்லை எனும் வரலாறு படைத்துள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையிலான ஆட்சி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்துள்ள சீர்திருத்தங்களால் புதியதாக துணை மின் நிலையங்களை நிறுவி, மின் மாற்றிகளை அமைத்து, மின் விநியோக அமைப்புகள் சீராகச் செயல்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் இந்த அரசைப் பாராட்டுகின்றனர்.
– இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.