புதுடில்லி, மே 30 டில்லியில் அதிகாரிகள் ராகுல் காந்தியை சந்திக்கத் தொடங்கிவிட்டனர், என்று டில்லி அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி மாலை வரை உள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளிலேயே பெரும்பாலும் எந்தக் கட்சி வெல்லும் என்று தெரிந்துவிடும். இன்னும் சொல்லப்போனால் பல அய்ஏஎஸ் அதிகாரிகளுக்கு ஏற்கெனவே தேர்தல் முடிவுகள் எப்படிச் செல்லும் என்று தெரிந்து இருக்கும். தேசிய அளவில் மக்களவைத் தேர்தல் தீவிரம் இன்னும் முடியவில்லை. மக்களவைத் தேர்தலுக்கான கொண்டாட்டங்கள், பிரச்சாரங்கள் மிக தீவிரமாக நடந்தபடியே இருக்கின்றன. இறுதிக்கட்ட வாக்குப் பதிவிற்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தற்போதைய மக்களவை தேர்தலில் ஏழாவது மற்றும் கடைசி சுற்று வாக்குப்பதிவு நடைபெறும் நாளில்.. அதாவது ஜூன் ஒன்றாம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் கூடுவார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியை அதிகாரிகள் சந்திக்க ஆரம்பித்துவிட்டனர்
டில்லியில் அதிகாரிகள் ராகுல் காந்தியை சந்திக்க தொடங்கிவிட்டனர். அய்ஏஎஸ் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரியும். அங்கே காட்சிகள் மாறுகின்றன. அவர்களுக்கு முடிவுகள் முன்கூட்டியே தெரியும். அப்படிதான் அவர்களுக்கு தெரிகிறது. ஆட்சி மாறப் போகிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். அவர்கள் ராகுலை சந்தித்து வருகின்றனர். ஆட்சி மாறுகிறது என்பதை முடிவே செய்துவிட்டனர். இதற்கு முன் இப்படி எல்லாம் நடந்தது இல்லை. ராகுலை பார்க்கின்றனர்; கார்கேவை பார்க்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்குமுன் இப்படி நடந்ததே இல்லை. அந்த அளவிற்கு நிலைமை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மாறி உள்ளது, என்று கட்சி நிர்வாகிகள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
நெருங்கும் இறுதிக்கட்டம்
நாடு முழுக்க 7 கட்டங்களாக மக்கள வைத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் 4 ஆம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது. கடந்த வாரம் 6 மாநிலங்களில் 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் நடந்த 6 ஆம் கட்ட தேர்தலில் 61.75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.. 7 ஆம் கட்ட தேர்தல் ஜூன் ஒன்றாம் தேதி நடக்க உள்ளது.
இந்நிலையில், ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் வெற்றி யாருக்கென்பது தெரிந்துவிடும்.புதுடில்லி, மே 30 டில்லியில் அதிகாரிகள் ராகுல் காந்தியை சந்திக்கத் தொடங்கிவிட்டனர், என்று டில்லி அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி மாலை வரை உள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளிலேயே பெரும்பாலும் எந்தக் கட்சி வெல்லும் என்று தெரிந்துவிடும். இன்னும் சொல்லப்போனால் பல அய்ஏஎஸ் அதிகாரிகளுக்கு ஏற்கெனவே தேர்தல் முடிவுகள் எப்படிச் செல்லும் என்று தெரிந்து இருக்கும்.
தேசிய அளவில் மக்களவைத் தேர்தல் தீவிரம் இன்னும் முடியவில்லை. மக்களவைத் தேர்தலுக்கான கொண்டாட்டங்கள், பிரச்சாரங்கள் மிக தீவிரமாக நடந்தபடியே இருக்கின்றன. இறுதிக்கட்ட வாக்குப் பதிவிற்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தற்போதைய மக்களவை தேர்தலில் ஏழாவது மற்றும் கடைசி சுற்று வாக்குப்பதிவு நடைபெறும் நாளில்.. அதாவது ஜூன் ஒன்றாம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் கூடுவார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியை அதிகாரிகள் சந்திக்க ஆரம்பித்துவிட்டனர்
டில்லியில் அதிகாரிகள் ராகுல் காந்தியை சந்திக்க தொடங்கிவிட்டனர். அய்ஏஎஸ் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரியும். அங்கே காட்சிகள் மாறுகின்றன. அவர்களுக்கு முடிவுகள் முன்கூட்டியே தெரியும். அப்படிதான் அவர்களுக்கு தெரிகிறது. ஆட்சி மாறப் போகிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். அவர்கள் ராகுலை சந்தித்து வருகின்றனர். ஆட்சி மாறுகிறது என்பதை முடிவே செய்துவிட்டனர். இதற்கு முன் இப்படி எல்லாம் நடந்தது இல்லை. ராகுலை பார்க்கின்றனர்; கார்கேவை பார்க்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்குமுன் இப்படி நடந்ததே இல்லை. அந்த அளவிற்கு நிலைமை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மாறி உள்ளது, என்று கட்சி நிர்வாகிகள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
நெருங்கும் இறுதிக்கட்டம்
நாடு முழுக்க 7 கட்டங்களாக மக்கள வைத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் 4 ஆம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது. கடந்த வாரம் 6 மாநிலங்களில் 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் நடந்த 6 ஆம் கட்ட தேர்தலில் 61.75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.. 7 ஆம் கட்ட தேர்தல் ஜூன் ஒன்றாம் தேதி நடக்க உள்ளது.
இந்நிலையில், ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் வெற்றி யாருக்கென்பது தெரிந்துவிடும்.