ஜம்மு – காஷ்மீரில் உள்ள அனந்தநாக் தொகுதியில் நேற்று (25.5.2024) தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், மேனாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி போட்டியிடுகிறார். இந்நிலையில், மெகபூபா அனந்தநாக் தொகுதியில் தனது கட்சியின் பூத் முகவர்களை காரணமின்றி காவல்துறையினர் கைது செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையினரின் அத்துமீறலை கண்டித்து கட்சி நிர்வாகிகளுடன் மெகபூபா முப்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
ஜம்மு- காஷ்மீரில் நடப்பது என்ன? வாக்களிக்க விடாமல் தொண்டர்களை தடுப்பதா? மெகபூபா முப்தி போராட்டம்
Leave a Comment