புதுடில்லி, மே 19 ரயில் களில் கீழ் படுக்கை கேட்டு முன்பதிவு செய்யும் அனைவருக்கும் அது கிடைக் காது என்றும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங் கப்படும் என்று கூறி, இந்திய ரயில்வே புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.
ரயில்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் லட்சக்கணக்கான பயணிகளின் முதல் தேர்வு கீழ் படுக்கை அல்லது ஜன்னலோர படுக்கை பெர்த் தான். ஏனெனில், ஜன்னலோரத்தில் இருப்பதோடு, ஏறி, இறங்குவதற்கும் வசதியாக இருக்கும் என்பதால், முன்பதிவின்போதே பலரும் இதையே தேர்வு செய்கின்றனர்.
ஆனால், பேருந்துகளில் நம்முடைய இருக்கையை உறுதி செய்து, முன்பதிவு செய்வது போல, ரயில்களில் நாம் விரும்பிய இருக்கைகள் வழங்கப்படுவதில்லை. ரயில் பெட்டிகளை நிரப்புவதற்கான வரை முறைகளை பின்பற்றியே, ஒவ்வொரு பயணிகளுக்கும் முன்பதிவும், அவர்களுக்கான இருக்கைகளும் உறுதி செய்யப்படுகின்றன.
இருப்பினும், முன்பு கீழ் படுக்கை கேட்கும் பெரும்பாலான நபர்களுக்கு அது வழங்கப்பட்டு விடும். ஆனால், இனி யாருக்கெல்லாம் கீழ் படுக்கை கிடைக்கும் என்று ரயில்வே புதிய விதிகளை வகுத்துள்ளது.
குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கு கீழ் படுக்கையில் முன்னுரிமை வழங்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகளின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி, உறங்கும் வசதி 4 இருக்கைகள் ஒதுக் கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும், 2 ‘டையர்’ மற்றும் 3 ‘டையர்’ ஏசி பெட்டிகளில் தலா 2 இருக்கைகள் ஒதுக்கப்படும் என்றும், அதில் மாற்றுத்திறனாளிகளும், அவர் களுடன் பயணிப்பவர்கள் அமரலாம் என்றும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளைப் போல, மூத்த குடிமக்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில், ஸ்லீப்பர் வகுப்புகளில் 6 முதல் 7 கீழ் படுக்கைகளும் களும், 3 டையர் ஏசி பெட்டிகளில் 4 முதல் 5 கீழ் படுக்கை-களும், 2 டையர் ஏசி பெட்டிகளில் 3 முதல் 4 கீழ் படுக்கை-களும் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கர்ப்பிணிகளுக்கும் கீழ் படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். ஒருவேளை மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மேல் பெர்த் ஒதுக்கப்பட்டி ருந்தாலும், பயணச் சீட்டு பரிசோதகரை அணுகி, கீழ் படுக்கைகள் வாங்கிக் கொள்ளலாம் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.