புதுடில்லி, மே 19- இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் ஏழை குடும்பங்களுக்கு மாதந் தோறும் 10 கிலோ உணவு தானி யங்கள் இலவசமாக வழங்கப்ப டும் என, காங்கிரஸ் கட்சி தெரிவித் துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல் வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே வெளியிட் டுள்ளது. இந்நிலையில், ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் ஏழை குடும்பங்க ளுக்கு மாதந்தோறும் 10 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
முந்தைய அய்க்கிய முற்போக் குக் கூட்டணி ஆட்சியில் தான், உணவுப் பாதுகாப்புச் சட்டம் மூலம் உணவு உரிமைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டதை குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, பிரதமர் மோடி 20 முதல் 25 கோடீஸ்வரர்களை உருவாக்கி அதானி அரசை நடத்தி வருவதாகவும் விமர்சித் துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தகுதியுள்ள மகளிருக்கு மாதந்தோறும் 8 ஆயிரத்து 500 ரூபாய், சுய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகளும் நிறை வேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி அரசு கோடிக்கணக்கான லட்சாதிபதிகளை உருவாக்கி ‘இந்தியர்களின்’ அரசை நடத்தும் என்றும் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.
பள்ளிப்பட்டு விசலேசுவரம் கோயிலில்
பாண அரசர் கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருவள்ளூர், மே 19- திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டத்தைச் சேர்ந்த சிற்றூர்களுள் ஒன்று விளக்கணாம்பூண்டி ஆகும். டாக்டர் மா. ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மய்யத் தைச் சேர்ந்த ஆய்வாளர் மருத்துவர் சுந்தரேசன் இங்குள்ள விசலேசுவரம் கோயிலில் ஆய்வு மேற்கொண்டபோது கோயில் விமானத்தின் தாங்குதளத்தில் பொறிக்கப்பட்டிருந்த அரிய கல் வெட்டொன்றைக் கண்டறிந்துள்ளார். அதன் தாங்குதளம் கற் கட்டுமானமாக அமைய, பிற அனைத்து உறுப்புகளும் செங்கல், சுதை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் வளாகத்தி லிருந்து அரசர் விஜய கண்டகோபாலரின் கல்வெட்டு உள்ளிட்ட தூண், பலகைக் கல்வெட்டுகள் சில முன்னரே கண்டறியப்பட்டுள் ளன. டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மய்ய ஆய்வர் கள் உருவாக்கி வரும் “காலத்தால் முற்பட்ட கட்டுத்தளிகள்” பற்றிய ஆய்வு நூலுக்காக அத்தகு கட்டமைப்பிலுள்ள தமிழ்நாட்டுக்
கோயில்களை ஆய்வுசெய்து, அவற்றின் காலத்தை உறுதிசெய்யும் சான்றுகள் தேடும் பணியில் ஈடுபட் டுள்ளார் ஆய்வாளர் சுந்தரேசன். விளக்கணாம்பூண்டி விசலேசுவரம் கோயிலில் விரிவான ஆய்வுப் பணி மேற்கொண்டபோது இறைவிமானத்தின் தாங்குதள உறுப்பான குமுதத்தில், விஜயா தித்த வாணராயர் எனும் பாணஅரசரின் பெயர் பொதுக்காலம் 9ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் பொறிக்கப்பட்டி ருந்ததை அவர் கண்டறிந்தார்.
இக்கல்வெட்டை ஆராய்ந்த ஆய்வு மய்ய இயக்குநர் டாக்டர் கலைக்கோவன் கூறும்போது, மருத்துவர் சுந்தரேசனால் கண்டறியப்பட்ட இக்கல்வெட்டு, விசலேசுவரம் கோயில் இப் பாணஅரசரின் காலத்தில் கட்டப்பட்டதாகலாம். பொ.கா. 9ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 10ஆம் நூற்றாண்டின் தொடக்கத் திலும் விளக்கணாம் பூண்டியையும் அதைச் சுற்றியுள்ள பகுதி களையும் ஆட்சி செய்த பாணர் மரபைச் சேர்ந்தவர் விஜயாதித்த வாணராயர். இது, பல்லவ மேலாண்மையின்றி விஜயாதித்தர் தனியாட்சி நடத்தியமை காட்டுகிறது. இக்கல்வெட்டுச் சான்றுகள் பாண அரசர் விஜயாதித்த வாணராயரின் சிறப்புமிக்க ஆட்சியை யும் அவரால் உருவாக்கப்பட்ட குடியிருப்புகளையும் உணர்த்து கின்றன. விளக்கணாம்பூண்டி விசலேசுவரம் கோயிலில் புதி தாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டு, இக்கோயில் விஜயாதித்த வாணராயரால் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதச் செய்கிறது என்றார்.