காங்கிரஸ் கணிப்பு
ராஞ்சி. மே.17- இது வரை நடந்த 4 கட்ட தேர்தல்களில் தென் இந்தியாவில் பா.ஜனதா துடைத்து எறியப்பட்டு விட்டது, மற்ற பகுதி களில் பா.ஜனதா பாதி யாக சுருங்கிவிட்டது என்பதை உணர்த்துவ தாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் காங்கிரஸ் பொதுச் செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித் தார். அவர் கூறியதாவது:-ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க ‘இந்தியா’ கூட்டணி உருவாக்கப்பட் டது. இந்த அமைப்புகளை பாது காக்கும் நோக்கத்தில் நாங்கள் தேர்தலில் போட்டி யிடுகிறோம்.
நாங்கள் சொத்து களை பகிர்ந்து அளிப்பது பற்றி பேசவில்லை. பிரதமர் மோடி, மத அடிப்படையில் வாக்கா ளர்களை ஒருங்கிணைக்க முயன்று வருகிறார். ஆனால், ‘இந்து – முஸ்லிம்’ அரசியல் செய்யவில்லை என்று பொய் சொல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி. பதவி விலகப் போகும் பிரதமர் ஆவார். ஆரம்பகட்ட வாக்குப்பதிவுகளை தொடர்ந்து அவர் விரக்தி அடைந்திருப்பதே அதை உணர்த்துகிறது. அது போல், அமித்ஷா, பதவி விலகப்போகும் உள்துறை அமைச்சர் ஆவார். ஜூன் 4-ஆம் தேதி. இந்த பொய் பெருந் தொற்றில் இருந்து நாடு விடுபடும்.
இதுவரை நடந்த 4 கட்ட தேர் தல்கள், தென் இந்தியாவில் இருந்து பா.ஜனதா துடைத்து எறியப்பட்டு விட்டது என்பதையும், நாட்டின் மற்ற பகுதிகளில் அதன் பலம் பாதியாக சுருக்கப்பட்டு விட்டது என்பதை யும்தெளிவாக காட்டுகிறது.
எனவே. இந்தியா’ கூட்டணி உறுதி யாக ஆட்சி அமைக்கும். அதன்பிறகு, ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப் படும். அம லாக்கத்துறை, சி.பி.அய்., வருமானவரித் துறை ஆகியவற்றை பா.ஜனதா அரசு தவறாக பயன் படுத்தியது.
‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், அந்த அமைப்புகளுக் கான அதிகாரங்கள் மறுஆய்வு செய் யப்படும். முதலாளித்துவவா திகள் பலன் அடையும்வகையில் நிலம் கைய கப்படுத்தும் சட்டங் களை பா.ஜனதா அரசு பலவீ னப்படுத்தி விட்டது.
-இவ்வாறு அவர் கூறினார்.