கருத்துக் கணிப்பு தகவல்
சண்டிகார், மே 16 அரியானாவில் காங் கிரஸ் – ஆம் ஆத்மி அடங்கிய “இந்தியா” கூட்டணி மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்றும், ஜேஜேபி கட்சி யின் ஆதரவு நிலைப்பாட்டால் பாஜக “ஒயிட் வாஷ் (அனைத்தையும் இழக்க லாம்)” ஆகலாம் எனவும் கருத்துக் கணிப் புகளில் தகவல் வெளியாகியுள்ளது.
குறைந்தபட்ச ஆதார விலை உள் ளிட்ட 13 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள், விவசாயிகள் டில்லியை முற்றுகையிட்டு இரண்டு கட்டப் போராட் டத்தை நடத்தினர். போராடிய விவசாயி களை ஏதோ அண்டை நாட்டு எல்லை யில் போரில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்று, டில்லி எல்லையில் மோடி அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள டில்லி காவல்துறை, துணை ராணுவப் படை மற்றும் அரியானா பாஜக அரசின் காவல்துறை ஆகியவற் றின் மூலம் விவசாயிகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியது. இரண்டு கட்ட போராட்டத்தின்போது, மோடி அரசின் தாக்குதலில் 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், “எங்கள் மீது தாக்குதல் நடத்தி, எங்களது நண்பர்களை கொன்று விட்டு, எதற்கு எங்கள் ஊரில் வாக்குக் கேட்க வருகிறீர்கள்?” என விவசாயிகள் கேள்வி எழுப்பி அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் பிரச் சாரத்திற்கு வருகை தரும் பாஜகவினரை விரட்டியடித்து வருகின்றனர். இதில் அரி யானா மாநிலத்தில் பாஜக வேட்பாளர் களின் நிலைமை படுமோசமாக உள்ளது. சிர்சாவில் அசோக் தன்வார், அம்பாலா வில் பான்டோ கட்டாரியா, சோனிபட்டில் மோகன் லால் படோலி, ரோடக்கில் அரவிந்த் சர்மா, மகேந்திர காட்டில் தரம்பிர் சிங், குருக்ஷேத்ராவில் நவீன் ஜிண்டால் போன்ற பாஜக வேட்பாளர் களை விவசாயிகள் ஒன்று திரண்டு விரட்டியடித்ததால், தங்களது பிரச்சாரம் மற்றும் பேரணிகளை ரத்து செய்து, வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
பாஜக மூத்த தலைவரும், அரியானா மேனாள் முதலமைச்சருமான மனோகர் லால் கட்டார் மக்களவை தேர்தலில் கர்னூல் தொகுதியில் களமிறங்கியுள்ளார். இவர் பிரச்சாரம் செய்யும் இடங்களெல் லாம் விவசாயிகள் கருப்புக் கொடியுடன் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத னால் மனோகர் லால் கட்டார் பிரச்சாரக் கூட்டங்களை ரத்து செய்து கட்சி அலு வலகத்திற்குச் சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4 நாள்களாக அவர் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியின்
பிரச்சாரமும் ரத்து
அரியானா மாநிலத்தில் உள்ள 10 மக்களவை தொகுதிகளுக்கும் 6ஆவது கட்டத்தில் மே 25 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலை யில், பிரதமர் மோடி, அரியானாவில் மே 18 அன்று முதல் பிரச்சாரத்தை தொடங் குகிறார். மேனாள் முதலமைச்சர் கட்டார் உள்பட பாஜக வேட்பாளர்கள் விவசாயி களால் விரட்டியடிக்கப்பட்டு வருவதால், பிரதமர் மோடியின் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறுவது நிச்சயமற்றது என பாஜக மேலிடம் கூறியுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
“இந்தியா” கூட்டணிக்கு
7 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும்
அரியானாவில் விவசாயிகள், பொது மக்கள் மோடி மற்றும் பாஜகவினர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். பிரச்சாரம் செய்யவே பாஜகவினர் தயங்கிடும் நிலையில், ஜீரோ கிரவுண்ட், லோக் போல் உள்ளிட்ட கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள, கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி அடங்கிய “இந்தியா” கூட்டணி மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்றும், ஜேஜேபி கட்சியின் ஆதரவு நிலைப்பட் டால் அரியானாவில் பாஜக “ஒயிட் வாஷ் (அனைத்தையும் இழக்கலாம்)” ஆகலாம் எனவும் கருத்துக் கணிப்புகளில் தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.