சித்தமல்லி, மே 14- மறைவுற்ற நாகை நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான தோழர் எம்.செல்வராஜ் அவர்களுக்கு திராவிடர் கழகம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை.இரா.ஜெயக் குமார் தலைமையில் அவ ரது சித்தமல்லி இல்லத் தில் நேரில் சென்று மாலை வைத்து இறுதி மரி யாதை செய்யப்பட்டது.
நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.எ. நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, திருவா ரூர் மாவட்ட பகுத்தறிவா ளர் கழகத் தலைவர் ஈவெரா, மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இள மாறன், திருத்துறைப் பூண்டி நகரத் தலைவர் சித்தார்த்தன், நகரச் செய லாளர் நாகராஜ், கோட் டூர் ஒன்றிய செயலாளர் குமார், கீழையூர் ஒன்றிய தலைவர் ரெங்கநாதன், மாவட்டத் துணைத் தலைவர் பொன்.செல்வ ராஜ், திருமருகல் ஒன்றிய தலைவர் சின்னதுரை, மாவட்ட இளைஞரணி தலைவர் சு.ராஜ்மோகன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் ஒக்கூர் ராஜேந்திரன், இளைஞர் அணி பொறுப்பாளர் தங்க கிருஷ்ணா, மன் னார்குடி பகுத்தறிவாளர் கழக கோபால் ஆகியோ ரும் இறுதி மரியாதை செலுத்தினர். தோழர் எம்.செல்வராஜ் மறை வுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இரங்கல் அறிக்கை தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.