‘இந்தியா’ கூட்டணி வென்றால் ‘அக்னிவீர்’ திட்டம் ஒழிக்கப்படும், ஜி.எஸ்.டி. சட்டம் திருத்தப்படும்! ராகுல் காந்தி உறுதி!

1 Min Read

ராஞ்சி, மே 9- ஜார்க்­கண்ட் மாநி­லம் கும்­லா­வில் நடை­பெற்ற தேர்­தல் பிரச்­சார பொதுக்­கூட்­டத்­தில் காங்­கி­ரஸ் மே­னாள் தலை­வர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசி­னார். அப்­போது அவர் கூறி­ய­தா­வது;-
“இந்­தியா கூட்­டணி வெற்றி பெற்­றால், பிர­த­மர் மோடி­யால் கொண்டு வரப்­பட்ட ‘அக்­னி­வீர்’ திட்­டம் ஒழிக்­கப்­ப­டும். அந்த திட்­டத்தை இந்­திய ராணு­வம் கொண்டு வர­வில்லை. தியா­கி­களை நாங்­கள் வேறு­ப­டுத்­திப் பார்க்க விரும்­ப­வில்லை. தேசத்­துக்­காக தியா­கம் செய்­யும் எவ­ருக்­கும் தியாகிக்கான தகுதி வழங்­கப்­பட வேண்­டும், அவர்­க­ளுக்கு ஓய்­வூ­தி­யம் கிடைக்க வேண்­டும்.
பா.ஜ.க. அரசு அய்ந்து வரி அடுக்­கு­க­ளு­டன் தவ­றான ஜி.எஸ்.டி. திட்­டங்­களை செயல்­ப­டுத்­தி­யது. நாங்­கள் அதைத் திருத்தி குறைந்­த­ பட்­ச­மாக ஒரு வரி அடுக்கை உரு­வாக்­கு­வோம். ஏழை­கள் மீதான வரிச்­சு­மை­யைக் குறைப்­போம்.

பழங்­கு­டி­யின மக்­க­ளுக்கு பா.ஜ.க. தலை­மை­யி­லான ஒன்றிய அரசு துரோ­கம் செய்து வரு­கி­றது. புதிய நாடா­ளு­மன்ற கட்டட திறப்பு விழா மற்­றும் அயோத்தி ராமன் கோவில் குடமுழுக்கு விழா­விற்கு ஜனா­தி­பதி திர­வு­பதி முர்­முவை அழைக்­கா­மல் அவரை பா.ஜ.க. அவ­ம­தித்­தது.
நாட்­டில் உள்ள பொதுத்­துறை நிறு­வ­னங்­கள், ரயில்வே போன்­ற­வற்றை தொழி­ல­தி­பர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்க வேண்­டும் என்­ப­தில் பா.ஜ.க. மிக­வும் உறு­தி­யாக உள்­ளது.”
-இவ்­வாறு ராகுல் காந்தி தெரி­வித்­தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *