ராஞ்சி,மே.8- பிரதமர் மோடி 22 பேரை பெரும் ‘கோடீஸ்வரர்கள்’ ஆக்கினார். நாங்கள் கோடிக்கணக் கானோரை ‘லட்சாதிபதி’ ஆக்குவோம் என்று ராகுல்காந்தி கூறி னார்.
ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசா வில் ‘இந்தியா’ கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. அதில், காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:- இந்த தேர்தல், அரசமைப்புச் சட்டத்தையும், ஆதிவாசிகள், ஏழைகள், பிற்படுத் தப்பட்டோர் ஆகியோரின் உரிமைக ளையும் பாதுகாக்கும் தேர்தல். அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க தங்கள் உயிரையும் தியாகம் செய்ய ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் தயாராக உள் ளனர்.
ஆதிவாசிகளின் நிலம், நீர், காடு ஆகியவற்றை பெரும் தொழில் அதிபர்களுக்கு வழங்க பிரதமர் மோடி விரும்புகிறார். அவர் அம் பானி, அதானிக்காக உழைக்கிறார்.தனது 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் 22 பேரை பெரும் ‘கோடீஸ்வரர்கள்’ ஆக்கினார்.
ஆனால், இந்தியா கூட்டணியோ, கோடிக்கணக்கான மக்களை ‘லட்சாதி பதி’ ஆக்கும்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்ப வர்களை அடையாளம் காண ஆதிவாசிகள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியவற்றில் இருந்து ஏழைகள் பட்டியல் தயாரிக் கப்படும். அதில் இருக்கும் ஏழை பெண் களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங் கப்படும். ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், 100 நாள் வேலைத்திட்ட சம்பளம் ரூ.400 ஆக உயர்த்தப் படும். பொதுத்துறை நிறுவனங் களில் ஒப்பந்த பணிமுறை நீக்கப்படும். இடஒதுக்கீட் டின் அளவு 50 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்படும். பட்டம், பட்டயம் படித்த இளைஞர்களுக்கு ஓராண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகையுடன் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.
ஹேமந்த் சோரன்: ஆதிவாசிகள், வீட்டு வேலைக்காரர்களாக மட்டுமே இருக்கவேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது. மருத்துவர், பொறியாளர், வழக்குரைஞர்கள் ஆவதை விரும்புவது இல்லை. நாட்டை 90 அய்.ஏ.எஸ். அதி காரிகள் நிர்வகிக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மட்டுமே ஆதிவாசி ஆவார். அவரையும் டில்லியில் ஓரங்கட்டி வைத்துள்ளனர். ஆதிவாசி இனத்தை சேர்ந்த முதலமைச்சரை (ஹேமந்த் சோரன்) பா.ஜனதா சிறை யில் அடைத் துள்ளது. அவர் விரைவில் விடுதலை ஆவார். -இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனும் கலந்து கொண்டு பேசினார்.