இராகுல் பேசுவதைக் கேட்போம்:
மெரிட் என்றால் என்ன? உண்மையில் நடந்த கதை ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன். இந்தியாவில் IIT க்களை போன்ற அமெரிக்காவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வு SAT என்று அழைக்கப்படுகிறது. முதன்முதலாக SAT தேர்வுகள் அமல் படுத்தப்பட்ட போது ஒரு வினோதம் நடந்தது.
வெள்ளை அமெரிக்க மாணவர்கள் மட்டுமே அதில் முதன்மை மதிப்பெண் பெற்றார்கள். கருப்பின அமெரிக்க மாண வர்களால் நல்ல மதிப்பெண்கள் பெற முடியவில்லை. ஸ்பானிஷ் மொழி பேசும் லத்தீன் அமெரிக்க மாணவர்களாலும் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை. இதுபற்றி கல்வியாளர்கள் சொன்னார்கள்: ஆப்பிரிக்க கருப்பின மாணவர்களுக்கும் லத்தீன் அமெரிக்க மாணவர்களுக்கும் மெரிட் சாமர்த்தியம் இல்லை என்று சொன்னார்கள். இவர்களால் கடினமான பாடங்களை புரிந்து கொள்ளவே முடி யாது என்று சொன்னார்கள்.
இந்த வகை கருத்தாக்கம் பல ஆண்டுகளாக இருந்தது. அதன் பின் ஓர் அறிவார்ந்த பேராசிரியர் திடீரென வந்தார். நான் ஒரு சோதனை செய்து பார்க்கிறேன் என்றார் அவர். ஆப்பிரிக்க கருப்பின மாணவர்கள் தேர்வு எழுதிய ஒரு கேள்வித்தாளை அவர் கேட்டு வாங் கினார். வெள்ளை அமெரிக்க மாணவர் கள் அதற்கு விடை எழுதுமாறு பணித் தார். என்ன நடந்தது தெரியுமா? வெள்ளை அமெரிக்க மாணவர்கள் அனைவரும் fail ஆகி விட்டனர். இதிலிருந்து தெரி வது என்ன? தேர்வு முறையை யார் கட் டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ அவர்கள்தான் மெரிட்டை முடிவு செய் கிறார்கள். உதாரணமாக உங்கள் அப்பா ஒரு விவசாயி. என்னுடைய அப்பா ஓர் அதிகாரி என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் வினாத்தாளை உருவாக்கினால் நான் failஆகிவிடுவேன். நான் வினாத் தாளை உருவாக்கினால் நீங்கள் நிச்சயம் failஆகி விடுவீர்கள். யார் மெரிட் உள்ளவர் என்பது இங்கே அதிகாரத்தில் உள்ளவர்களால் தீர்மானிக்கப்பட்டு வந் துள்ளது.
நமது நாட்டில் IIT தேர்வுக்கான வினாத்தாளை வடிவமைப்பவர்கள் அனைவரும் உயர்த்தப்பட்ட ஜாதியினர். அதனால் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் தோல்வியடைகின்றனர். இப்போது ஒரு மாற்றம் செய்து பார்ப் போம். IIT தேர்வுக்கான வினாத்தாளை தாழ்த்தப்பட்ட ஜாதியினர் வடிவமைக் கட்டும். ஆம். இதை நாம் நிச்சயமாக முயற்சி செய்து பார்ப்போம். ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று நான் பேசுவதே இந்த சமூக நீதிக்காகத்தான்.
– கோ.கருணாநிதி