பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

viduthalai
1 Min Read

புதுடில்லி, மே 5- ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஜரண்வாலியிலிருந்து சூரன்கோட் விமானப் படை தளத்துக்கு வீரர்கள் நேற்று (4.5.2024) மாலை 6 மணியளவில் திரும்பி கொண்டிருந்தனர். அப் போது சசிதர் பகுதியருகே வீரர்கள் பயணித்த 2 வாகனங்கள் மீது 4 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வீரர்களும் பதில் தாக் குதலைத் தொடங்கினர். இதை யடுத்து, வனப்பகுதி வழியாக பயங் கரவாதிகள் தப்பியோடினர்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 5 பாதுகாப்புப் படை வீரர்கள் காய மடைந்தனர். அவர்கள் அருகிலி ருக் கும் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரர் ஒருவர் வீரமரணமடைந்தர். மற்றொரு வீரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்துக்கு விரைந்த ராணு வம் மற்றும் காவல் துறையினர், அந்த இடத்தைச் சுற்றி வளைத்து தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய விமா னப்படை வீரரின் மரணத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கண்டனத் தையும், இரங்கலையும் தெரிவித்து உள்ளார்.
அதில், “ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​பகுதியில் ராணுவ வாகனத் தின் மீது நடத்தப்பட்ட கோழைத் தனமான பயங்கரவாத தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது.
வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு எனது பணிவான மரி யாதையை செலுத்துவதுடன், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங் கலை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்தார்,

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *