கொல்கத்தா, மே 3- மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் மீது ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பெண் பாலியல் குற்றச்சாட்டு அளித்துள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் சி.வி. ஆனந்த போஸ், ஆளுநராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், கொல்கத்தா ஆளுநர் மாளிகையில், ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், பாலியல் தொல்லை அளித்ததாக, பெண் ஊழியர் ஒருவர் புகார் கூறியுள்ளார்.
இது குறித்து கொல்கத்தா ஹரே வீதி காவல்நிலையத் தில் புகார் அளித்த பெண் ஊழியர், தாம் பணியில் இருந்த போது, ஆளுநர் ஆனந்த போஸ், பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இரவு கொல்கத்தா ஆளுநர் மாளிகை யில் தங்கும் சூழலில் ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும் பாஜகவின் உண்மை முகம் மெல்ல வெளிப்பட்டு வருவதாக, சமூக வலைத்தளத்தில் திரிணா முல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சாகரிகா கோஸ் பதிவிட்டுள்ளார்.
நம்புங்கள்!
சி.பி.அய். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இல்லையாம்!
உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசின் கூற்று!
புதுடில்லி, மே 3- மேற்கு வங்காளத்தில் விசாரணை நடத் தவும், சோதனை நடத்தவும் சி.பி.அய்.க்கு அளிக்கப் பட்டிருந்த பொது அனுமதியை கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி மேற்கு வங்காள மாநில அரசு திரும்பப் பெற்றது.
எனவே, அங்கு விசாரணை நடத்த மாநில அரசிடம் சி.பி.அய். முன்அனுமதி பெறுவது அவசியம் என்று கருதப்பட்டது. ஆனால், அதன்பிறகும் மாநில அரசிடம் முன்அனுமதி பெறாமல் சி.பி.அய்.விசாரணை மற்றும் சோதனை நடத்தி வருவதாக குற்றம்சாட்டி, ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்காள மாநில அரசு வழக்குத் தொடர்ந்தது.
ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையிலான மோத லில் தலையிட்டு தீர்வு காண அரசியல் சட்டத்தின் 131 ஆவது பிரி வின்கீழ் உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருப்பதால், அப்பிரிவின்கீழ், மேற்கு வங்காள மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:-
அரசியல் சட்டத்தின் 131-வது பிரிவு, உச்சநீதிமன்றத் துக்கு அளிக்கப்பட்ட மிகவும் புனிதமான அதிகாரங்களில் ஒன்று. அதை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது. மேற்கு வங்காளம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ள வழக்குகளை ஒன்றிய அரசு பதிவு செய்யவில்லை. இந்திய அரசு எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. அவ்வழக்குகளை சி.பி.அய். தான் பதிவு செய்தது. சி.பி.அய்., இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை.
-இவ்வாறு அவர் கூறினார்.