புதுடில்லி, மே 3 ஒன்றிய பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பணியிடங் களை குறைத்து இட ஒதுக்கீட்டை அப கரித்துவிட்டதாக காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட் டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,
“பொதுத்துறை நிறுவனங்களை தனி யார்மயமாக்குவதன் மூலம் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டை ஒன்றிய பாஜக அரசு ரகசியமாக பறித்து வருகிறது.
2013 ஆம் ஆண்டு பொதுத்துறையில் 14 லட்சம் பணியிடங்கள் இருந்த நிலையில், 2023 இல் அது 8.4 லட்சமாகக் குறைந்தது.
BSNL, SAIL, BHEL போன்ற மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களை அழித்ததன் மூலம், 6 லட்சம் பணியிடங்கள் நீக்கப்பட்டன. இவை இட ஒதுக்கீட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் பணியிடங் களாகும். ரயில்வே போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் காண்ட்ராக்டில் வேலை கொடுத்து, பின்வாசல் வழியாக அனுப்பப் படுபவர்களின் எண்ணிக்கைகளுக்கு கணக்கே இல்லை. மோடியின் தனியார் மயமாக்கம் கொள்கை என்பது நாட்டில் உள்ள வளங்களை கொள்ளையடிப்பதும், தாழ்த்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை பறிப்பதுமாகும். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்துவோம். அதேநேரத்தில் ஒன்றிய அரசில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். ஒவ்வொரு பிரிவினருக்குமான வேலைவாய்ப்பு கதவு களைத் திறப்போம்
மூங்கில் இல்லை என்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது. அதேபோல, அரசு வேலை இல்லை என்றால் இட ஒதுக்கீடு கிடைக்காது” என்று தெரிவித்துள்ளார்.