புதுடில்லி, மே3 கருநாடகாவில் பா.ஜ.க. கூட்டணியின் ஜேடிஎஸ் வேட்பாளரான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச காட்சிப்பதிவுகள் வெளியாகி பெரும் சர்ச் சையை உருவாக்கி உள்ளது. தற்போது அவர் ஜெர்மனியில் உள்ளார். ஆபாச காட்சிப் பதிவுகள் வெளியான உடனேயே ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறையின் உதவியோடு ‘டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட்’ மூலம் அவர் வெளிநாடு சென்றார் என்பது தற்போது தெரியவந்துள்ளது
கருநாடகாவில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஜே.டி.எஸ். கட்சி பெரிய சிக்கலில் சிக்கியுள்ளது. இந்தக் கட்சியின் நிறு வனரான மேனாள் பிரதமர் தேவகவு டாவுக்கு அவரது மூத்த மகன் ரேவண்ணா மற்றும் பேரன் பிரஜ்வல்லால் தலைவலி ஏற்பட்டுள்ளது. தேவகவுடாவின் மகன் ரேவண்ணா ஹாசன் மாவட்டம் ஹொலேநரசிப்புரா சட்டமன்ற உறுப் பினராக உள்ளார்.
ரேவண்ணாவின் மகனும், தேவ கவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ஜே.டி.எஸ். சார்பில், ஹாசன் நாடாளு மன்ற உறுப்பினராக உள்ளார். தற் போதைய மக்களவைத் தேர்தலிலும் ஹாசனில் பாஜக கூட்டணியில் ஜே.டி.எஸ். வேட்பாளாராக பிரஜ்வல் போட்டியிட்டுள்ளார். கடந்த மாதம் 26 ஆம் தேதி இந்தத் தொகுதிக்கு தேர்தல் நடந்தது. இதில் வாக்களித்த பிரஜ்வல் உடனடியாக ஜெர்மனி பறந்தார். இதற்கு முக்கிய காரணம் அவரது ஆபாசக் காணொலிகள் ஹாசன் தொகுதி மக்கள் மத்தியில் பரவியதுதான்.
இது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா எஸ்.அய்.டி. சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். எஸ்.அய்.டி. குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் மேனாள் பணிப்பெண் அளித்த பாலியல் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரஜ்வல், அவரது தந்தை ரேவண்ணாவை எஸ்.அய்.டி. விசாரணைக்கு அழைத்து அவர்களின் வீட்டில் அழைப்பாணை ஒட்டப்பட்டுள்ளது.
ஆபாச காட்சிப் பதிவு வெளியான பிறகு அவர் எப்படி ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார். அவர் ஜெர்மனி செல்ல விசா எடுக்காத நிலையில் எப்படி வெளிநாட்டுக்கு விமானப் பயணம் மேற்கொண்டார் என்ற பல கேள்விகள் கடந்த சில நாள்களாக எழுந்தன.
இந்நிலையில் ஹாசன் தொகுதிக்கு கடந்த மாதம் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. ஆனால், அதற்கு முன்பே அவரது ஆபாச காட்சிப் பதிவுகள் வெளியாகி விட்டன. இதையடுத்து தேர்தல் நாளில் ஹாசனில் ஓட்டுப் போட்ட பிரஜ்வல் உடனடியாக ஜெர்மனிக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். இதற்கு அவர் வழக்கமாக பயன்படுத்தும் பாஸ்போர்ட்டை பயன் படுத்தவில்லை. அந்தப் பாஸ்போர்ட்டை பயன்படுத்தினால் கட்டாயம் விசா வேண்டும். விசா எடுக்க காலதாமதமும் ஏற்படலாம். இதனால் பிரஜ்வல் டிப்ள மெட்டிக்’ பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஜெர்மனி பறந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் முக்கிய நிகழ்வுகளுக்காக விசா இல்லாமலேயே பல நாடுகளுக்கு ‘டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட்’ மூலம் செல்ல அனுமதி உள்ளது. இந்த முறையில் தான் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு சென்றுள்ளார். இதற்கு ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை உதவியுள்ளது
பொதுவாக இந்த ‘டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட்’ என்பது ‘ஜிஹ்ஜீமீ ஞி’ வகை பாஸ்போர்ட் என அழைக்கப்படும். இந்தியாவை பொறுத்தமட்டில் தூதர்கள், அரசு அதிகாரிகள், ஒன்றிய அரசு சார்பில் வெளிநாடு பயணம் செல்வோருக்கு இந்தப் பாஸ்போர்ட் என்பது வழங் கப்படும். இந்தப் பாஸ்போர்ட் குங் குமப்பூ நிறத்தில் இருக்கும். மேலும் இந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்வோருக்குப் பாதுகாப்பு உள்பட சில சிறப்பு வசதிகளும் கிடைக்கும். எந்த நாட்டிற்குச் செல்கிறாரோ அந்த நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும்
இந்நிலையில் தான் பிரஜ்வல் ரேவண்ணா ‘டிப்ளமெட்டிக் பாஸ் போர்ட்டில்’ வெளிநாடு சென்றிருப்பதை அறிந்த கருநாடகா முதலமைச்சர் சித் தராமையா, அதனை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘‘பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் பிரஜ்வல் ரேவண்ணாமீதான புகார் குறித்து கருநாடகா எஸ்.அய்.டி. விசாரணை மேற்கொண்டுள்ளது. ஆனால், பிரஜ் வல் வெளிநாடு சென்றுள்ளார். அவர் ‘டிப்ளமெட்டிக் பாஸ்பார்ட்’ பயன் படுத்தி வெளிநாடு சென்றுள்ளார். இதனால்அவரது‛‘டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட்டை’ ரத்து செய்து இந்தியா அழைத்து வர உதவி செய்ய வேண்டும்” என அக்கடிதத்தில் எழுதியுள்ளது குறிப் பிடத்தக்கது.
ரத்து செய்ய முடியாதாம்
இந்த நிலையில் ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை ‘டிப்ளமெட்டிக் பாஸ் போர்ட்டை’ ரத்து செய்ய முடி யாது என்று கூறியுள்ளது. இது தொடர் பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வித்தியாசமான விளக்க அறிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் ‘டிப்ளமெட்டிக் பாஸ் போர்ட்’ விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டாம். அவர் வெளிநாடு சென்றதற்கும், எங்கள் அமைச்சகரத்திற்கும் தொடர்பு இல்லை. ‘டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட்’ விவகாரத்தில் எங்களுக்கு தொடர் பில்லை என்ற போது, அதை ரத்து செய் வதும் எங்களது வேலை இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.