பெங்களூரு, மே 2- கருநாடக மாநிலம் கலபுரகியில் காங்கிரஸ் வேட்பாளர் தொட்டமணி ராதா கிருஷ்ணாவை ஆதரித்து கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 30.4.2024 அன்று பிரச்சாரம் செய்தார்.
அவர் பேசியதாவது:
பல்வேறு பெண்களு டன் 3,000 ஆபாச காட் சிப் பதிவுகளில் இடம் பெற்ற பிரஜ்வலை பாஜக மேலிட தலைவர்களே வேட்பாளராக நிறுத்தி னர். பாஜக நிர்வாகிகளே ஆபாச காட்சிப் பதிவுகள் குறித்து தெரிந்து, அக் கட்சி தலைவர்களிடம் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு ஏற்கெ னவே தெரிந்திருக்கிறது.
ஆனாலும், பிரஜ்வலின் தோள் மீது கையை வைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்தார். 10 நாட்களுக்கு முன்பு வரை கூட அவரை புகழ்ந்து பேசினார். இப்போது அவர்தான் பிரஜ்வலை நாட்டைவிட்டு தப்பி யோட வைத்திருக்கிறார். பிரதமருக்கு பெண்கள் மீது அக்கறை இல்லை. இப்போதுகூட பாதிக்கப் பட்ட பெண்களுக்காக குரல் கொடுக்க மறுக் கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் மோடியுடன் தேவகவுடா, குமாரசாமி, ரேவண்ணா, பிரஜ்வல் ஆகியோர் ஏற்கெனவே எடுத்துக்கொண்ட ஒளிப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரியங்கா காந்தி, ‘இது தான் மோடியின் உண் மையான குடும்பம்’ என்று பதிவிட்டுள்ளார்.