புதுடில்லி, மே 2- 2018 மற்றும் 2020ஆம் ஆண்டுக்கு இடையே பறிமுதல் செய்யப்பட்ட 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 70,772.544 கிலோ ஹெராயின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளில் இருந்து காணாமல் போயுள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்தை பதில ளிக்கக் கோரி பத்திரிகையாளர்
பி.ஆர்.அரவிந்தாக்ஷன் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், “ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெரா யின் காற்றில் புகையாக காணாமல் போனதா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆகியவை நான்கு வாரத் திற்குள் பதிலளிக்க உத்தர விட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை செப் டம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் புகையாக காற்றில் கரைந்துவிட்டதா? உள்துறை அமைச்சகத்தை கேள்வி கேட்ட டில்லி நீதிமன்றம்
Leave a Comment