புதுடில்லி,ஏப்.28- நாட்டில் 25 செல்வந்தர் களை உருவாக்கியதுதான் பிரதமர் மோடியின் சாதனை என்றும், ஆனால் கோடிக்கணக்கான மக்களை செல்வந் தர்களாக மாற்றுவதுதான் இந்தியா கூட்டணியின் நோக்கம் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள காட்சிப் பதிவில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை யில் எண்ணற்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பி னரும் பயன்பெறும் வகையில் காங்கி ரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட் டுள்ளார்.
ஆனால், “பா.ஜ.க., தேர்தல் அறிக் கையில் இதுபோன்று ஏதாவது ஒன்றை யாவது சொல்ல முடியுமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். “நாட் டில் 25 செல்வந்தர்களை உருவாக்கி யதுதான் பிரதமர் மோடியின் சாதனை என்றும், ஆனால், கோடிக்கணக்கான மக்களை செல்வந்தர்களாக மாற்றுவது தான் இந்தியா கூட்டணியின் நோக்கம்” என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் ராகுல்காந்தி விடுத்த வலை தளப் பதிவில், ‘‘மோடியின் உத்தர வாதம் ஏழை மக்களின் வளர்ச்சிக் கானது அல்ல, அதானி போன்ற பெரும் பணக்காரர்களுக்கானது’’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அப்பதிவில் இந்திய மக்களின் வாழ் வாதாரத்தை முன்னேற்றுவதற்காக காங் கிரஸ் கட்சி உத்தரவாதம் அளித்துள் ளதாகக் கூறியுள்ளார். ஆனால், மோடியோ அதானி போன்ற பணக்காரர்களின் வளர்ச்சிக்கு உத்தர வாதம் அளித்துள்ள தாக குற்றம் சாட்டியுள்ளார்.
“மகளிருக்கு மாதம் எட்டாயிரத்து 500 ரூபாய் வழங்க ப்படும்” என்று காங் கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், மோடியின் ஆட்சியில் நாட்டின் சொத்துகள் ஒருசில பணக்காரர் களிடம் மட்டுமே குவிக் கப்பட்டுள்ள தாகக் குற்றம் சாட்டினார்.
“10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் விவசாயிகள் ஒவ்வொரு பைசா சம்பா திப்பதற்கும் ஏங்குவதாகக் கூறியுள்ள ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி ஆட் சிக்கு வந்த வுடன், குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டமாக்கப்படும்” என்றும் உறுதி யளித்துள்ளார்.