சென்னை, ஏப். 26- கல்லணை கால்வாய் புனரமைப்பு 2ஆ-ம் கட்ட திட் டத்துக்கு ரூ.447 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, நீர்வள ஆதாரத் துறை செயலர் சந்தீப் சக்சேனா தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்.19ஆம் தேதி நிதியமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையில் உரையில்,
கல் லணை கால்வாய் அமைப்பு முதல் கட்ட விரிவாக்கம், புனர மைப்பு மற்றும் நவீன மயமாக்கும் திட்டத்துக்காக ரூ.1,037 கோடி நிதிஒதுக்கப்பட்டு பணிகள் முடி யும் தருவாயில் உள்ளது.
2ஆ-ம் கட்ட பணிகள் ரூ.400 கோடியில் வரும் ஆண்டில் மேற் கொள்ளப்படும். இதன் மூலம் தஞ்சை, புதுக்கோட்டை மாவட் டங்களில் 2.3 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்’’ என்று தெரிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின்படி, நீர்வள ஆதாரத்துறை தலைமைப் பொறி யாளர், திட்டத்துக்கான விரிவான அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பினார். அதில் 2-ஆம் கட்ட திட்டத்துக்கு ரூ.447 கோடி கோரியிருந்தார். இந்த பரிந்துரையை கவனமாக பரிசீலித்த தமிழ்நாடு அரசு, கல்லணை கால்வாய் புனர மைப்புக்கு ரூ.447 கோடி நிதியை ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் வழங்கி யுள்ளது.
மேலும், இத்திட்டத்துக்கு முதலில் ரூ.100 கோடியை பட்ஜெட் ஒதுக்கீட்டில் இருந்து பெறவும், மீதமுள்ள தொகையை பணியின் முன்னேற்றத்தின் அடிப்படையில் பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.