சாண்ட் கபீர் நகர், ஏப். 25- உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் அமைச்சர் சஞ்சய் நிஷாத் முகத்தில் ஒரு கும்பல் குத்து விட்டுள்ளது,
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு மீது கடும் அதி ருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் கலிலாபாத் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகம் மத்பூர் கதார் கிராமத்தில் திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்து கொள்ள அமைச்சர் சஞ்சய் நிஷாத் 22.4.2024 அன்று இரவு சென்றிருந் தார்.
திருமண வீட்டில் இருந்த சுமார் 20-25 பேர் கொண்ட கும்பல் அமைச்சரிடம் அவரது மகனான நாடாளுமன்ற உறுப்பினர் பிரவின் நிஷாத் மற்றும் நிஷாத் கட்சி குறித் தும் தரக்குறைவாகப் பேசியுள்ளனர். பொறுமையிழந்த அமைச்சர் நாடா ளுமன்ற உறுப்பினர் இங்கே வரும் போது நேரில் அவர்களது குறைக ளைக் கூறும்படி அறிவுறுத்தியுள் ளார்.
அந்த கும்பல், அமைச்சரிடம் “நீங்கள் அமைச்சர் தானே நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். திடீரெனக் கும்பலில் இருந்த ஒருவர் அமைச்சர் சஞ்சய் நிஷாத முகத்தில் குத்தியுள்ளார். இதனால் அவர் அணிந்திருந்த கண்ணாடி உடைந்து, அவரது மூக்கில் இருந்து ரத்தம் கொட்டத்தொடங்கியது.
காவல்துறையினர் உடனடியாக அவரை அங்கிருந்து மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அமைச் சரின் செயலாளர் இந்தத் தாக்குதல் குறித்து கோட்வாலி காவல்நிலை யத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின் றனர்.