இம்பால், செப். 13- மணிப்பூரில் பழங்குடியினர் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட னர். மணிப்பூர் மாநிலத் தில் பெரும்பான்மையி னராக இருக்கும் மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின தகுதி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 3-ஆம் தேதி குகி பழங்குடியின மக்கள் பேரணி நடத்தி னர். இந்த பேரணியில் வன்முறை ஏற்பட்டு, பின் னர் அது பெரும் கலவர மாக மூண்டது. இந்த கலவரத்தில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை, வாழ் வாதாரத்தை இழந்து, சொந்த மாநிலத்திலேயே அகதிகளை போல நிவா ரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கலவரம் தொடங்கி 4 மாதங்கள் ஆகியும், இன்னுமும் கூட அங்கு பதற்றம் முழுமையாக நீங் கியபாடில்லை. மாறாக மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக வன் முறை சம்பவங்கள் அரங் கேறி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு மணிப்பூ ரின் தெங்னெவ்பால் மாவட்டத்தில் பல்லேல் நகரில் ஏற்பட்ட வன் முறையில் 3 சுட்டுக் கொல்லப்பட்டனர். பெண்கள் உள்பட 50-க் கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்தனர்.
இதனால் ஏற்பட்ட பதற்றம் தணிவதற்குள் நேற்று அங்குள்ள கங் போப்கி மாவட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 3 பேர் தடை செய்யப்பட்ட ஆயுதக் கும்பலால் சுட்டுக்கொல் லப்பட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தி இருக் கிறது. இம்பால் மேற்கு மற்றும் கங்போக்கி மாவட் டங்களின் எல்லை பகுதி யில் இருக்கும் இரெங் மற்றும் கரம் கிராமங்க ளுக்கு இடையில் அமைந் துள்ள காங்குய் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப் பட்டது. வாகனங்களில் வந்து இறங்கிய ஆயுத கும்பலை சேர்ந்தவர்கள் கிராம மக்கள் மீது கண் மூடித்தனமாக துப்பாக் கிச் சூடு நடத்தினர். இதில் குகி-சோ என்ற பழங்குடி யினத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் இம்பால் மேற்கு மற்றும் கங்போக்பி மாவட்டங்க ளில் பதற்றம் அதிகரித்து உள்ளது. கங்போக்பியை தளமாக கொண்ட செயல் படும் சிவில் சமூக அமைப் பான பழங்குடியினர் ஒற் றுமைக்கான குழு இந்த தாக்குதலுக்கு கடும் கண் டனம் தெரிவித்துள்ளது.