மாலே, ஏப்.22 மாலத்தீவு தேர்தலில் தற்போதையை அதிபரும் இடது சாரி கொள்கைகளைக் கொண்ட வருமான முகமது முய்சு வின் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள் ளது.
மாலத்தீவின் 20 ஆவது நாடாளு மன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடை பெற்றது. மொத்தமுள்ள 93 தொகு திகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர் தல் நடைபெற்றது.மாலத்தீவு அதிபர் முகமது முய்சு வின் செயல் பாடுகளால் அண்டை நாடான இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் அவரது செல்வாக்கை நிரூ பிப்பதற்கான முக்கிய சோதனை யாகப் பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டதில் அதிபர் முய்சு கட்சி அதிகப்படியான இடங்களில் வென்றது. கிட்டத்தட்ட 66 இடங் களை முய்சு கட்சி வென்றுள்ளது. இது நாடாளுமன்றத்தில் 3-இல் 2 பங்காகும். எனவே இந்த வெற் றியைத் தொடர்ந்து முய்சு தனது இடதுசாரி செயல்பாடுகளை அதி கரிப்பார் என்றே எதிர்பார்க்கப் படுகிறது.
இ
ந்த தேர்தலுக்கு முன்பு முய்சு வின் பிஎன்சி கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்ந்தே வெறும் 8 நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மட்டுமே இருந்ததால் அவரால் பல சட்டங்களை எளி தாகக் கொண்டு வர முடியவில்லை. அதிபர் முகம்மது முய்சு எதாவது சட்டத்தைக் கொண்டு வர முயன் றால் நாடாளுமன்றத்தில் முறியடிக் கப்பட்டு வந்தது. அவருக்குத் தற் போது நாடாளுமன்றத்தில் பெரும் பான்மை கிடைத்துள்ளதால், முகம் மது முய்சு சட்டங்களை நிறைவேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்க தாகும். இந்தியாவிற்கு எதிரான நிலைப் பாடு கொண்ட இடதுசாரி கட்சி மாலத்தீவில் ஆட்சி அமைப் பது தொடர்பாக வெளியுறவுத்துறை வல்லுநர்கள் கூறும் போது, மாலத்தீவு விவகாரத்தில் ஒன்றிய அரசின் ராஜதந்திரம் தோல்வி அடைந்ததாகவே கூறுகின்றனர்.
ஏற்கெனவே இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் இருந்தே நட் புணர்வோடு இருந்த மாலத்தீவு இந்திய கடற்படையின் ஒரு பகுதியை அங்கு நிரந்தரமாக நிறுத்த ஒப்பந்தம் உருவாகி சுமார் 6 ஆண்டுகளாக இந்தியப்பெருங்கடல் பகுதியில் இந்திய கப்பற்படைக் கப்பல்கள் பாதுகாப்பில் நின்றிருந் தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மோதலில் உச்சத்தில் இருந்த இந்திய மாலத்தீவு உறவி னால் அந்த அரசு இந்தியப் படைகள் முழுவதுமாக தங்கள் கடல் பிராந் தியத்தில் இருந்து விலகவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்ததது. இதனை அடுத்து இந்தியப் படைகள் மெல்ல மெல்ல முழுமையாக விலக் கப்பட்டது. அந்த இடத்தில் சீனக் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன.
மதவாதம் தொடர்பான தொடர் வெறுப்புப் பேச்சின் கார ணமாக மாலத்தீவில் இந்தியாவிற்கு எதிரான போக்கு இருந்ததால் அந்த நாடு இந்தியாவுடனான உறவை மெல்ல மெல்ல முறித்துக்கொண்டது தற்போது இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட அரசு அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்ந்துள்ளதால் இந்தி யப் பெருங்கடலின் மேற்கு பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பின்ன டைவு ஏற்பட்டுள்ளது.