10 ஆண்டுகளில் முதல் முறையாக முன்னணி அய்டி நிறுவனங்களில் ஊழியர் எண்ணிக்கை குறைப்பாம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி,ஏப்.22- கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய முன்னணி அய்டி நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது. இதனால், 2025இல் அய்டி துறையில் புதிதாக படித்து முடித்து வரும் பொறியாளர்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஊதியத் தையும் வேலைவாய்ப்பையும் அள்ளித்தரும் துறையாக தகவல் தொழில்நுட்ப (அய்டி) சேவைகள் துறை உள்ளது. பொறியியல் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் அய்டி துறையில் வேலைக்கு செல்வதையே விரும்புகின்றனர்.

இந்நிலையில், புதியவர்களின் தலையில் இடி விழும் வகையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக 2023_20-24ஆம் நிதியாண்டில் இந்திய முன்னணி அய்டி நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகிய 3 நிறுவனங்கள் தான் அய்டி பொறியாளர் களுக்கு வேலையை கற்றுத் தரும் நிறுவனங்களாக இருக் கின்றன. இந்நிறுவனங்கள் அதிகளவில் கல்லூரிகளி லேயே வேலை வாய்ப்பு முகாம் நடத்தி பொறியியல் முடித்து வெளியே வரும் மாணவர் களுக்கு வேலை கொடுத்து கோடிங் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கற்றுத் தருகின்றன.

இந்நிறுவனங்களில் கடந்த 10 ஆண்டாக ஊழியர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்த நிலையில், 2023_-2024இல் முதல் முறையாக குறையத் தொடங்கி உள்ளது. 6 லட்சத் துக்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட டிசிஎஸ் இல் 13,249 ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது டிசிஎஸ் இல் கடந்த 19 ஆண்டில் நிகழாத ஒரு நிகழ்வு. இதே போல, இன்போசிஸ், விப்ரோவும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளன. கடந்த நிதியாண்டில் அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி திவா லானது. அதனால் அந்த வங்கியின் பல்வேறு புரா ஜெக்ட்கள் அப்படியே நிறுத்தப்பட்டன. இதனால் வருவாய் இழப்பை சந்தித்த பல நிறுவனங்கள் ஆட்குறைப்பை செய்தன. இவ்வாறு கடந்த நிதியாண்டில் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது குறைப்பட்டதன் மூலம் 3 இந்திய முன்னணி நிறுவனங்களிலும் ஊழியர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது அடுத்த ஆண்டிலும் தொடர வாய்ப்புள்ளதால் 2025இல் படித்து முடித்து வருபவர்களுக்கு வேலை கிடைப்பது, கல்லூரிக்குள் நடைபெறும் முகாம் வேலை வாய்ப்பு அவ்வளவு எளிதாக இருக்காது என்கின்றனர் அய்டி தகவல் தொழில் நுட்ப மனிதவள ஊழியர்கள்.

* எதிர்கால திட்டம் என்ன?

டிசிஎஸ் நிறுவன மனிதவள தலைவர் சமீபத்தில் பேட்டியில், ‘‘நாங்கள் 40,000 ஊழியர்களை புதிதாக பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் அது எப்போது தொடங்குவது என்பது 2 மாதத்திற்கு பிறகே முடிவு செய்வோம்’’ என கூறி உள்ளார். 2025இல் எத்தனை பேரை வேலைக்கு அமர்த்துவது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என இன்போசிஸ் நிறுவனம் கூறி உள்ளது. டீம்லீஸ் டிஜிட்டல் நிறுவன வணிக தலைவர் கிருஷ்ணா விஜ் கூறுகையில், ‘‘அய்டி சேவை நிறுவனங்கள் புதிதாக பணியாளர்களை நியமிப்பதில் எச்சரிக்கையுடன் இருக்கின்றன’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *