புதுடில்லி, ஏப். 20- இந்தியா கூட்டணி பெரும்பான் மைக்குத் தேவையான 272 இடங்களுக்கும் மேலாக வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்த லின் முதல்கட்ட வாக்குப் பதிவு நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த நிலையில், செய்தியாளர்க ளிடம் பேசிய ராஜஸ் தான் மேனாள் துணை முதலமைச்சரும் காங்கி ரஸ் மூத்த தலைவருமான சச்சின் பைலட், “இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி களின் இந்தியா கூட்டணி அணி பெரும்பான்மைக் குத் தேவையான 272 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். ராஜஸ் தானில் பாரதிய ஜன தாவை விட காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும். நாடு முழுவதும் மாற்றத்துக் கான சூழல் உள்ளது. காங்கிரஸின் செயல்பாடு முன்பை விட சிறப்பாக இருக்கும் என்றும், ஜூன் 4-ஆம் தேதி இந்தியா கூட்டணி பெரும்பான்மை பெறும் என்றும் நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.
இதனிடையே, உத்தரப் பிரதேசத்தின் கவுதம் புத் நகரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட் டத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், “இந் தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் நாளில் அக்னி வீர் திட்டத்தை ரத்து செய் வோம் என இளைஞர்க ளுக்கு கூற விரும்புகிறேன். இன்று (19.4.2024) முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது, மேற்கு உ.பி.யில் பாஜக முழு மையாக தோற்கும் என்று வரும் தகவல்கள் தெரி விக்கின்றன. முதல்கட்டத் தேர்தலில் பாஜக தோல் வியடைந்தது போல் தெரிகிறது” என்று கூறினார்.
இந்தியா கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 272-அய் தாண்டும் சச்சின் பைலட் கருத்து
Leave a comment