புதுடில்லி, ஏப்.20 நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைக்கான முதற்கட்டத் தேர்தலில் 102 தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 60.03 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா வான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. 2024 மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று (19.4.2024) நடந்தது. 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அனைத்துக் கட்டங்களையும் விட அதிகப்பட்சமான தொகுதி களை முதல் கட்டம் கொண்டுள்ளது.
தொகுதி வாரியார்: தமிழ்நாடு (39), ராஜஸ்தான் (12), உத்தரப் பிரதேசம் (8), மத்தியப் பிரதேசம் (6), உத்தராகண்ட் (5), அருணாச்சலப் பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான் அண்ட் நிகோபார் தீவுகள் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), புதுச்சேரி (1), சிக்கிம் (1), லட்சத்தீவு (1), அசாம் (5), மகாராட்டிரா (5), பீகார் (4), மேற்குவங்கம் (3), மணிப்பூர் (2), திரிபுரா (1), ஜம்மு காஷ்மீர் (1), சத்தீஸ்கர் (1) தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த 102 தொகுதிகளிலும் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி 60.03 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தமிழ்நாட்டில் 72.09%, ராஜஸ்தானில் 50.3%, உத்தரப் பிரதேசத்தில்57.5 சதவீதம், மத்தியப் பிரதேசத்தில் 63.5 சதவீதம் வாக்குகள் பதிவாகி யுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்த வரையில் அருணாச்சலப் பிரதேசத்தில் 67.5 சதவீதமும், சிக்கிம் மாநிலத்தில் 64.7 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
மணிப்பூர், மேற்கு வங்கத்தில் வன்முறை: மக்களவை முதற்கட்டத் தேர்தல் பெரும்பாலும் அமைதியாகவே நடந்தது. மணிப்பூர், மேற்கு வங்கத்தில் மட்டும் சிறிய அளவிலான வன்முறைச் நிகழ்வு நடந்துள்ளன.
மேற்கு வங்கத்தின் 42 மக்களவைத் தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. கூச் பெஹார், அலிபுர்துவார், ஜல்பைகுரி என 3 தொகுதிகளிலும் 2019 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில், இந்தத் தொகுதிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்ததுமே, பல வாக்குச்சாவடிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் – பாஜக ஆதரவாளர்கள் இடையே மோதல்கள் வெடித்தன.
நாடு முழுவதும் 60.03 சதவீதம் வாக்குகள் பதிவாகின
Leave a Comment