புதுடில்லி, ஏப்.18 கேரளா மாநிலம் காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின் போது பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்குகள் விழுந்ததாக புகார் எழுந்துள்ளது.
ஒருமுறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.க.வுக்கு 2 வாக்குகளும், மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள், நோட்டாவுக்கு ஒரு வாக்கும் பதிவானதால், தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் அளித்தனர்.
மேலும் பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டுகள் பதிவான விவ காரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒப்புகைச்சீட்டு 100 சதவீதம் எண்ணக்கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டுகள் பதிவாவது குறித்து மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் முறையிட்டார். மேலும், வாக்கு இயந்திரங்களைக் கையாளும் பொறியாளர்கள், தேர்தல் ஆணையத்துக்குக் கட்டுப்படாதவர்கள் என்பதால், தில்லு முல்லு நடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தில்லுமுல்லு நடைபெறும் என்ற அச்சம் மட்டுமே உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.க.விற்கு 2 வாக்குகள் உச்சநீதிமன்றம் உடனடியாக தலையீடு
Leave a Comment