ஜெயங்கொண்டத்தில் பெரியார் பட ஊர்வலம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரசியல்

ஜெயங்கொண்டம், செப். 16- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய கலந்துரையாடல்கூட்டம் 15.9.2023 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் செங்குந்தபுரம் பிரபா வாட்டர் சர்வீஸ் வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையேற்க, மாவட்ட செயலாளர் மு.கோபால கிருஷ்ணன், காப்பாளர் சு. மணி வண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சி. காமராஜ், மாவட்ட துணைத் தலைவர் இரா .திலீபன் ஆகியோர் முன்னிலை வகிக்க தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன் சிறப்புரை யாற்றினார்.

ஜெயங்கொண்டம் ஒன்றியத் தில் அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை இனிப்புகள் வழங்கி கழகக் கொடியேற்றி சிறப் பாக கொண்டாடவும், பெரியார் பட ஊர்வலத்தை  ஜெயங்கொண் டத்தில் சிறப்பாக நடத்திடுவதென வும் முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் மு.ராஜா ஒன்றிய தலைவர் மா.கருணாநிதி, ஒன்றிய செயலாளர் துரை. பிரபாகரன் ஒன்றிய அமைப்பாளர் சி. தமிழ் சேகரன் ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா. தமிழரசன் உள் ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *