2024 நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்து வருகிறதா? யோசியுங்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் ஜெக்ரிவால், ஹேமந்த் சோரன் சிறையில்.
மக்கள் செல்வாக்கு உள்ள பல தலைவர்கள் சிறையில்.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம்.
காங்கிரஸ் வங்கி கணக்கிலிருந்து பல கோடி ரூபாய்களை வருமான வரித்துறை எடுத்து பல தேவையில்லாத வேலைகளை செய்வது.
கடந்த 10 ஆண்டுகளாக, வெறுப்பு அரசியலை பரப்புவது, 2000 ஆண்டுகளாக செய்து வரும் பிரித்தாளும் தந்திரத்தை மக்கள் மேல் செலுத்துவது.
இந்திய இறையாண்மையை மத வெறுப்பை விதைத்து கேள்விக் குறியாக்குவது.
கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைத்து மதச் சார்பு இன் மையையும் வீழ்த்துவது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்ற தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருவது.
குடியுரிமைப் பதிவேடு மூலம் மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டி விடுவது.
குடியுரிமைப் பதிவேட்டில் பதிய கோவில் குருக்களுக்கு அதிகாரம் வழங்கி ஆணை பிறப்பித்தல்.
வெளிநாடுகளிலிருந்து, நம் நாட்டில் குடியேறிய முஸ்லீம்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கக்கூடாத வகையில் சட்டத் திருத்தம்.
மனுதர்மத்தை மீண்டும் நிலை நாட்ட பல்வேறு முயற்சிகள் – விஸ்வகர்மா திட்டம் போன்றவைகளை செயல்படுத்தல்.
சமூகநீதி, மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், பெண்ணுரிமை, பாலின சமத்துவம், பேச்சுரிமை, எழுத்துரிமை, வழிபாட்டு உரிமை, கருத்துச் சுதந்திரம் இவைகளையெல்லாம் அழித்து ஒழிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுப்பது.
கூட்டாட்சி தத்துவத்தை நசுக்கிக் கொன்று, பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகளை சித்திரவதை செய்து, அந்த மாநிலங்களுக்கு வரி வருவாயில், மிகக் குறைவான பணத்தை மட்டும் தந்து நிர்வாகத்தை சீர்குலைப்பது.
தமிழ்நாடு , கேரளா போன்ற மாநிலங்களுக்கு வரி வருவாயில் 1 ரூபாய்க்கு 0.29 பைசா தரும் வகையில் சட்டத்தை திருத்துவது.
இந்தியாவின் வளர்ச்சி பொருளாதார நிலைகளை மறைத்து, இந்தியா ஒளிருவது போன்ற பொய்களை தொடர்ந்து கையாள்வது.
இடஒதுக்கீட்டை முற்றிலும் நீக்குவதற்கு தேவையான எல்லா வழிமுறைகளையும் தொடர்ந்து செய்து வருவது.
நாடு முழுவதும் ஏழைகளின் சதவிகிதம் கடந்த 10 ஆண்டுகளில் 10 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்து வருவதை மறைத்து, நாடு வளர்ந்து வருவதுபோல பொய் தோற்றத்தை உருவாக்குவது.
மும்மொழிகளைத் திணிக்கும் சதி ஒரு பக்கம்.
மேலே சொன்னவைகள், மிகக் குறைவான பா.ஜ.க.வின் செயல்கள். அப்படிப்பட்ட பா.ஜ.க.வா.. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்? சிந்தியுங்கள்.
– வி. அருணாசலம், நெய்வேலி